Monday, May 26, 2008

நான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன், எளிதில் ஏமாந்துவிடுவான்

வெறும் பேச்சுதான்...! 
  
 
 
பெண்ணென்றால் பேயும்
இரங்குமாமே!
இங்கே இந்த வரதட்சணை பேய்கள்
வாய் பிளந்தல்லவா
பார்க்கின்றன!
அழகும் அந்தஸ்தும்
அங்கத்தில் அல்ல;
அகத்திலே என்று
மனம் பார்த்து
மணம் முடியாதவரை,
பெண்கள் முன்னேற்றம்
வெறும் பேச்சுதான்...!

செ.பூங்குழலி, காட்டுமன்னார் கோவில்.
 

 
 
 
கற்றுக் கொள்ளுங்கள்! 
  
 
 

"நான் அடிமையாக இருக்க மாட்டேன். ஆகவே நான் எஜமானாகவும் இருக்க மாட்டேன். இது ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படை தத்துவம்'' என்கிறார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன்.

பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.
 

 
 
 
பொன்மொழிகள் தரும் உண்மை 
  
 
 
* இன்று தலைகுனிந்து படிக்கும் படிப்பு, நாளை தலை நிமிர்ந்து வாழ வைக்கும்.

* உண்மையைப் பேசி கெட்டவரும் இல்லை, பொய் பேசி நிம்மதியாக வாழ்ந்தவரும் இல்லை.

* பொய் சொல்வதால் கிடைக்கும் வெற்றியை விட, உண்மையினால் வரும் தோல்வி மேல்!

* வாழ்நாளில் இனிய பருவம் இளமைப் பருவம் என்பதை பலர் முதுமையில்தான் உணர்கின்றனர்.

* நான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன், எளிதில் ஏமாந்துவிடுவான்.

* பிறரை மகிழ்விப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது.

விக்டர்ஜான், சென்னை-99.
 

 
 
 
சான்றோர் வாக்கு 
  
 
 
"யாரையும் இழிவாக
பேசாதே!
நம்பிக்கை இழக்காதே!
அவ நம்பிக்கையானது அறிவு, ஒழுக்கம் இவற்றின் வீழ்ச்சியாகும்.''

-டாக்டர் அம்பேத்கார்.

எம்.எஸ்.மயில், சாத்தான்குளம்.
 

 
 
 
எழுவேன்...! 
  
 
 
வீழ்ந்துதான் கிடக்கிறேன்
சோர்ந்துவிடவில்லை!
முடியாதென்று
சொல்வதற்கு
என் மனம் இன்னும்
முடமாகவில்லை!
இதோ எழுகிறேன்
புதியதோர்
நம்பிக்கை கொண்டு
எனக்காக காத்திருக்கும்
அந்த சிகரத்தின் உச்சியை
அடைவதற்கு...!

ப.ஷேன் அலாவுதீன்,
பர்கூர்.
 

 
 
 
நம்பர்-7 
  
 
 
உலக அதிசயங்கள் எத்தனை என்று கேட்டால்? கேள்வியை முடிக்கும் முன்பே `ஏழு' என்று பதிலளிப்பீர்கள். உலக அதிசயங்களை 7 என்ற எண்ணிக்கையில் கணக்கிடும் வழக்கம் கி.மு.2-ம் ஆண்டிலேயே துவங்கிவிட்டது. அப்போது வாழ்ந்த ஆன்ட்டிப் பேட்டர் என்பவர், உலகின் பழங்கால அதிசயங்களை வரிசைப்படுத்தினார். 7-ம் நம்பர் கிரேக்கர்களின் புனித எண் என்பதால் அதனை அடிப்படையாகக் கொண்டு உலக அதிசயங்களைப் பட்டியலிட்டார்.

க.சக்திவேல், போழக்குடி.
 

 
 
 
குதிரைத் தூக்கம் 
  
 
 
குதிரைகள் நின்று கொண்டு தூங்குபவை. தரையில் படுத்து, கால்களை மடக்கி தூங்கினால் மூச்சுவிடுவதற்கு குதிரைகள் சிரமப்படுகின்றன. இதனால்தான் அவைகள் நின்று கொண்டு தூங்குவதை விரும்புகின்றன. அப்படி தூங்கும் போது கீழே விழாமல் இருக்க கால்களின் மூட்டுப் பகுதியில் உள்ள தசைகள் உதவுகின்றன. குதிரையைப் போன்று வேறு சில மிருகங்களும் நின்று கொண்டுதான் தூங்குகின்றன.

பா.விக்னேசுவரன், குட்டம்.
 

 
 
 
அப்படியா? 
  
 
 
பூமியின் மீதுள்ள அனைத்துப் பொருட்களின் மீதும் ஒரு ஈர்ப்பு விசை செயல்படுகிறது என்பதை நிரூபித்தவர் மாபெரும் விஞ்ஞானியான ஐசக் நிïட்டன். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் கி.பி.1642-ம் ஆண்டில் பிறந்தார்.

க.பத்மா, வெள்ளூர்.
 

 
 
 
ஓகோ! 
  
 
 
* 1850-ம் ஆண்டுகளில்தான் சாக்லேட் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டது.

* வருமானவரி வசூலிக்கும் முறையை முதன்முதலில் இங்கிலாந்துதான் உலகிற்கு அறிமுகப்
படுத்தியது.

* அமேசான் நதியுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளை நதிகள் இணைகின்றன.

* நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட கற்களில் யுரேனியம், பொட்டாசியம், தோரியம் போன்றவை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

கமலி வெங்கட், வெண்ணந்தூர்.
 

 
 
 
சர்ச்சிலின் பேச்சாற்றல் 
  
 
 
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரும், சிறந்த தலைவருமான வின்ஸ்டன் சர்ச்சில் அவருடைய, நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "ஒவ்வொரு மேடையிலும் நீங்கள் பேசும் போது அரங்கத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அந்த சமயத்தில், மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அபிமானத்தை எண்ணி பெருமைப் படுவீர்கள்தானே?'' என்று சர்ச்சிலிடம் அவரது நண்பர் கேட்டார்.

"அரங்கிற்கு வரும் கூட்டத்தை ஒருபோதும் நம்பி பெருமைப்பட்டுக் கொள்ள மாட்டேன். நான் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கி மக்கள் மத்தியில் தண்டனை வழங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது எனக்கு வழங்கப்படும் தண்டனையை காண இதைவிடவும் அதிகமான கூட்டம் வர வாய்ப்புள்ளது'' என்று பதிலளித்தார் சர்ச்சில்.

இந்த புதுமையான பதிலைக் கேட்டு அவரது நண்பரும் அசந்து போனார்.

ரா.கமலவதி, திருச்சி. 
 
 
http://www.dailythanthi.com/irmalar/Home/second_page.asp?secid=14&artid=4915&issuedate=5/24/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails