Wednesday, May 21, 2008

சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்ட 79 வயது சாமியார் ரூ.4 கோடி ரொக்க ஜாமீனில் விடுதலை


சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்ட
79 வயது சாமியார் ரூ.4 கோடி ரொக்க ஜாமீனில் விடுதலை
அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்புவதற்கு அனுமதி


ஹுஸ்டன், மே.21-

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சாமியார் ஒருவர் சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கைதானார். அவர் இந்தியா வருவதற்காக ரூ.4 கோடி ரொக்க ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

200 ஏக்கர் பரப்பில் கோவில்

அமெரிக்காவில் உள்ள இந்துக்கோவில்களில் மிகப்பெரியது பர்சானா தாம். இந்த கோவில் டெக்சாஸ் நகரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் 35 ஆயிரம் சதுர அடி நிலப்பரப்பில் கட்டப்பட்டு உள்ளது. இதை கட்டியவர் பிரகாஷ் ஆனந்த் சரஸ்வதி என்ற சாமியார். 79 வயதாகும் இவர் 3 வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

கடந்த 1993-ம் ஆண்டு முதல் 1996 வரை உள்ள காலகட்டத்தில் இவர் 2 சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாகவும் இவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதைம்தொடர்ந்து தான் அவர் கைது செய்யப்பட்டார்.

விமான நிலையத்தில்

கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி டல்லஸ் விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் கைது செய்யப்பட்டார். அவர் ஐரோப்பாவில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று விட்டு திரும்பினார். அவர் நிறுவிய கோவிலில் தான் குற்றம் நிகழ்ந்ததால் அவர் அந்த கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.

சாமியார் இந்தியா செல்லவேண்டி இருப்பதால் அவரை அனுமதிக்கவேண்டும் எக்றும் இதற்கு வசதியாக அவரை ஜாமீனில் விடுதலை செய்யவேண்டும் என்றும் கோரி மனுச்செய்யப்பட்டது.

ரூ.4 கோடி ரொக்க ஜாமீனில் விடுதலை

கோவிலை நடத்தி வரும் கம்பெனியின் இயக்குநர் மற்றும் பொருளாளரான பீட்டர் ஸ்பீக்கல் மனுச்செய்தார். 4 கோடி ரூபாய் ரொக்க ஜாமீனில் விடுதலை செய்ய கோர்ட்டு அவருக்கு அனுமதி அளித்தது. அதற்கு சம்மதம் தெரிவித்த பீட்டர் ஸ்பீக்கல் அந்த தொகையை செலுத்தினார். அதன்பிறகு அவர் இந்தியா செல்ல அனுமதிக்கப்பட்டார்.

ஜாமீனில் விடுதலை செய்யப்படும் அவர் இந்தியா செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்று போலீஸ் தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பை மாவட்ட கோர்ட்டு நீதிபதி சார்லஸ் ராம்சே ஏற்கமறுத்து, சாமியார் இந்தியா செல்ல அனுமதி வழங்கினார்.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=413906&disdate=5/21/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails