சுஜாதா (மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.
இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி.ரங்கராஜனுடன் குழப்பம் ஏற்பட்டதால் தன் மனைவி பெயரை, 'சுஜாதா', தன் புனைப்பெயராக வைத்துக்கொண்டார்.
நோயுற்ற மனைவி இறந்த விரக்தி, தனிமையால் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் தற்கொலை செய்து கொண்டார்.
http://satrumun.com/2008/03/01/எழà¯à®¤à¯à®¤à®¾à®³à®°à¯-ஸà¯à®Ÿà¯†à®²à¯à®²à®¾-பà¯à®°à¯‚/
உங்கள் அபிமான படைப்புகள்
No comments:
Post a Comment