Sunday, March 23, 2008

ஒருவரின் கொல்ல அவரின் பத்தினி மனைவியை கற்பிழக்கச் செய்யவேண்டும்

ஒருவரின் கொல்ல அவரின் பத்தினி மனைவியை கற்பிழக்கச் செய்யவேண்டும்.அதாவது அரக்கன் ஒருவனை கொல்ல தேவர்களால் முடியவில்லை.உடனே விஷ்ணுவிடம் சென்று முறையிடுகிறார்கள்.விஷ்ணுவாலும் அதை செய்து முடிக்க முடியவில்லை.இதன் காரணம் என்ன என்று விஷ்ணு ஞானதிருஷ்டியில் கண்டுபிடிக்கிறார்.இந்த அரக்கனைக் கொல்லம்முடியாததற்கு காரணம் அவனுடைய மனைவியின் பத்தினி தன்மைதான்.உடனே மஹாவிஷ்ணு அந்த அரக்கன் போல தன் உருவத்தை மாற்றி அந்த பெண்ணை கற்பிழக்க செய்கிறார்.அதன் பின் அந்த அரக்கன் கொல்லப்படுகிறான்.என்னே ஒரு கடவுளின் மகிமை.இது ஒரு சில வருடத்துக்கு முன் தினமலர் பத்திரிக்கையின் சிறுவர் மலர் பகுதியில் வந்த மஹாவிஷ்ணுவின் வரலாறில் கூறப்பட்டது.இதன் ஆதாரம் கிடைத்தவுடன் இதைப் பற்றி கட்டுரை வெளியிடுகிறேன்.ஆனால் அதற்கு முன் நண்பர் ஒருவர் வெளியிட்டுள்ள கட்டுரையை நாம் படிப்போம்
 
 
 
 
 

திருப்பாற்கடலில் சயனம் கொண்டிருந்த திருமால் திடீரென்று விழித்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிய ஏதோ ஒரு காட்சியைக்கண்டு கொண்டிருந்தார். திருமகள் பூமகள் ஆகியோருடன் அவர் பேசக் கூட இல்லை.அவர் உடல் எடை மிகவும் குறைந்து போனது. அவரைத் தாங்கி இருந்த ஆதிசேஷன் பயந்து போய், "பெருமாளே! தங்களது திருமேனி திடீரென்று எடை குறையக் காரணம் என்ன?" என்று கேட்டார்.

ஆதிசேஷனிடம், "சிவபெருமானின் திருநடனத்தை நான் காணப் போகிறேன். அது ஓர் அரிய நிகழ்ச்சி.

"சிவபெருமான் 'தாருகாவனம்' என்ற இடத்தில் வசிக்கும் முனிவர்களின் ஆணவத்தை அடக்கச் செல்கிறார். அவருடன் நான் மோகினி வடிவத்தில் செல்வேன். என் வடிவத்தைப் பார்த்து முனிவர்கள் மயங்குவர். அப்போது முனிவர்களின் பத்தினியர் சிவபெருமானின் அழகைப் பார்த்து மயங்குவர். இதன் காரணமாக அந்த முனிவர்கள் திருந்துவர். அவர்களது ஆணவமும் அழியும்.

"அந்த நேரத்தில் சிவன் உமா தேவியுடன் இணைந்து ஆனந்த நடனம் புரிவார். அந்தத் திருக்காட்சியைக் காணப் போகிறேன்" என்றார் திருமால்.

"நானும் உடன் வருவேன்" என்று ஆதிசேஷன் சொல்ல, பாம்பு உடலும் மனிதத் தலையும் கொண்டு பதஞ்சலி என்கிற பெயரில் பூலோகம் வந்தார் திருமால்.

இந்தப் பின்னணி நிகழ்ச்சியுடன் நடந்தது தான் ஆனந்த தாண்டவம். முனிவர்களின் ஆணவம் அனைத்தும் ஒன்றுகூடி 'முயலகன்' என்கிற பெயரில் அரக்க வடிவம் எடுத்தது. அது ஒரு யாக குண்டத்தில் ஒளிந்து கொண்டது. மீண்டும் அது அங்கிருந்து சிவபெருமான் மீது பாய்ந்தது. சிவன் அதை அடக்கி அதன் முதுகின் மீது தன் காலடியை ஊன்றினார்.

இவ்வாறு நடராஜர் திருவடிவம் உருவானது.

உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயங்களில் உள்ள நடராஜர் சந்நிதிக்கு திருவாதிரை அன்று அதிகாலை நான்கு மணிக்குச் சென்று பெருமானை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

*

இந்தக் கட்டுரை, முரசொலியிலோ, விடுதலையிலோ, கம்யுனிஸ்ட் பத்திரிகைகளிலோ வந்திருந்தால் 'இவனுகளுக்கு வேற வேலை இல்லை; அரைகுறையா எதையாவது கேள்விப்படறது; அந்த மாத்திரத்தில் ஒரு கட்டுரை எழுதி நாத்திகத்தைப் பரப்பறதா அலட்டிக்க வேண்டியது! இவனுகளுக்கு என்ன தெரியும் அந்த ஆனந்தத் தாண்டவத்தின் தத்துவமும் தாத்பரியமும்?" என்று ஒதுக்கி விடலாம். ஆன்மீகம் வளர்ப்பதைத் தினசரித் தொண்டாக செய்து வரும் தினமலரில் அல்லவா "ஆருத்ரா தரிசன" சிறப்புக் கட்டுரையாக வந்திருக்கிறது? (டிசம்பர்23, 2007 தினமலர் - வாரமலர் பக்கம் 3)'

தில்லையைப் பற்றிய ஒரு செய்தியாவது நல்லபடியாகக் கண்களில் படக் கூடாதா? அறுமுகசாமி, திருவாதிரை அன்னிக்கு காலையில் நான்கு மணிக்கு ஏதாவது சிவன் கோவில் நடராஜரை வணங்கி
தான் நினைத்ததைச் சாதித்திருக்கலாமே, அடிதடி ,காயம் , கைது என்றெல்லாம் ஆகாமல்?


"I CAN BE PATIENT WITH STUPIDITY; BUT NOT WITH THOSE WHO ARE PROUD OF IT" என்று சொன்ன அறிஞர் நிச்சயம் ஒரு நாத்திகவாதியாகத் தான் இருந்திருக்க முடியும். ஆத்திகம் என்பதே, PROUD OF BEING STUPID என்றாகி விட்டதே!

* * *http://rathnesh.blogspot.com/2008/03/blog-post_6546.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails