Tuesday, March 25, 2008

தீமையை உண்டாக்கியது கடவுள்-அதனால் கடவுள் இல்லை?

தேவனா தீமையை உண்டாக்கினார்?

கிறிஸ்தவர்களுக்கு எதிராக பேசுவதில் பேர்வாங்கின(பேர்போன) ஒரு பேராசிரியர் ஒரு கல்லூரியில் இருந்தார். அவர் ஒவ்வொரு செமஸ்டரிலும் தனது முதல் வகுப்பில் இங்கு யாராவது கிறிஸ்தவ மாணவர்கள் இருக்கிறீர்களா? என்று கேள்வி கேட்டு அவர்களை எழுப்பி விட்டு அவர்களை கிண்டல் பண்ணி அவர்களின் கிறிஸ்தவ விசுவாசத்தை எள்ளி நகையாடுவார். இப்படியாக ஒரு செமஸ்டரில் யாராவது கிறிஸ்தவ மாணவர்கள் இருக்கிறீர்களா என்று அவர் கேட்ட போது ஒரு மாணவன் தன் கையை உயர்த்தி எழுந்து நின்றான்.

அவனைப்பார்த்து அந்த பேராசிரியர் 'தேவன் தான் எல்லாவற்றையும் உண்டாக்குகிறாரா?' என்று கேட்டார்.

அவன் அதற்கு' யெஸ் சார். அவரே உண்டாக்குகிறார்' என்றான்.

அப்போது அந்த பேராசிரியர், ' தேவன் தான் எல்லாவற்றையும் உண்டாக்குகிறார் என்றால் தீமையையும் அவர்தான் உண்டாக்கியிருக்க வேண்டும் . அப்படிதானே?' என்று கேட்டார்.

அந்த மாணவன் பதில் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தா. அந்த பேராசிரியர் மீண்டும் ஒரு முறை கிறிஸ்தவ விசுவாசத்தை கேள்விக்குறியாக்கிவிட்ட பெருமிதத்தில் இருந்தார்.

அப்போது வேறொரு மாணவன் எழுந்து நின்று, சார், நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?' என்றான்.

சரி கேள் என்றார் பேராசிரியர்.

சார், குளிர்ச்சி என்று ஒன்று இருக்கிறதா? என்று அந்த மாணவன் கேட்டான்.

ஆம் இருக்கிறது. என்ன மடத்தனமான கேள்வி கேட்கிறாய். நீ ஒரு போதும் குளிர்ச்சியை உணர்ந்ததில்லையா என்று அவர் பதிலளித்தார்.

அந்த மாணவன் பதிலாக, சார், உண்மையில் குளிர் என்று ஒன்று இல்லை. வெப்பம் இல்லாத ஒன்றை தான் நாம் குளிர்ச்சி என்று கருதுகிறோம். முற்றிலும் வெப்பம் இல்லாமல் போகும் போது முற்றிலும் குளிர்ச்சியாகிவிடுகிறது. உண்மையில் குளிர் என்று ஒன்று இல்லை. வெப்பம் இல்லாதபோது நாம் எவ்வாறு உணருகிறோம் என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான் நாம் குளிர் என்ற ஒரு பதத்தை உண்டாக்கியிருக்கிறோம் என்று கூறிய அந்த மாணவன் தோடர்ந்து, சார் இருள் என்று ஒன்று இருக்கிறதா? என்று கேட்டான்.

அந்த பேராசிரியர் மீண்டுமாக, ஆம் இருக்கிறது என்றார்.

அதற்கு அந்த மாணவன், சார், உண்மையில் இருள் என்று ஒன்று இல்லவே இல்லை. வெளிச்சமின்மையைதான் நாம் இருள் என்று கூறுகிறோம். வெளிச்சம் இல்லாதபோது என்ன நடக்கிறது என்பதைக் குறிப்பிடுவதற்காக மனிதன் உருவாக்கிய பதமே இருள் என்பதாகும் என்றான்.

கடைசியாக அந்த மாணவன், சார் தீமை என்று ஒன்று இருக்கிறதா? என்று கேட்டான்.

அதற்கு பதிலளித்த பேராசிரியர், ஆம் இருக்கிறது.உலகமெங்கும் கற்பழிப்புகளும் கொலைகளும் மற்றும் வன்முறைகளும் நடக்கிறதே. இது தீமையானது அல்லவா? என்றார்.

இதற்கு பதில் கூறிய மாணவன், சார், உண்மையில் தீமை என்று ஒன்று இல்லை. ஒரு காரியத்தில் தேவனின்மையே தீமை ஆகும். தேவனின்மையைக் குறிப்பிடுவதற்காக மனிதன் உண்டாக்கிய பதமே தீமை ஆகும். தேவன் தீமையை படைக்க வில்லை. எப்படி வெப்பம் இல்லாமையால் குளிர் உண்டாகிறதோ அல்லது ஒளி இல்லாமையால் இருள் உண்டாகிறதோ அது போல தேவன் இல்லாத நிலையே தீமை என்று நாம் கூறலாம் என்று சொல்லி முடித்தான்.

அந்த பேராசிரியர் சொல்லுவதற்கு வகை தெரியாமல் மரமாய் நின்றார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails