Thursday, March 27, 2008

இது உங்களுக்கு தெரியுமா?எவரெஸ்ட் மலையைவிட ஆழம் சென்ற மனிதன்

மனிதன் சென்ற ஆழம்

மரியானா ட்ரெஞ்ச் என்ற இடம் இந்தோனேஷியாவுற்கு வடக்கே சீனாவுக்கு கிழக்கே இருக்கிறது.

இந்த இடம்தான் உலகத்திலேயே மிகவும் ஆழமான இடம்.

இந்த இடம் இரண்டு டெக்டானிக் பிளேட்டுகள் சேரும் இடம். பிலிப்பைன் பிளேட்டும் பசிபிக் பிளேட்டும் சேரும் இந்த இடத்தின் ஆழம் 10,911 மீட்டர்கள். அதாவது 35798 அடிகள்.

இந்த குழி 1951இல் பிரிட்டிஷ் கப்பலான சாலஞ்சரால் சர்வே செய்யப்பட்டது. அதனால் இந்த ஆழத்துக்கு சாலஞ்சர் டீப் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் மலை இருக்கும் உயரத்தை விட கடல் மட்டத்திலிருந்து இந்த ஆழம் அதிகமானது.

1960இல் அமெரிக்க கப்பற்படையின் பாத்திஸ்கேப் டிரிஸ்ட்டீ என்ற நீர்மூழ்கி மூலமாக அமெரிக்க நேவி லெப்டினண்ட் டான் வால்ஷ் என்பவரும் ஜாக் பிக்கார்ட் என்பவரும் இதற்குள் இறங்கினார்கள்.

இந்த நீர்மூழ்கி இதன் அடி ஆழத்துக்கு வரை சென்றது. அந்த அடி ஆழத்தில் மீன்களும் ஷ்ரிம்புகளும் இருப்பதை பார்த்தார்கள். அந்த ஆழத்தில் தரை தெளிவானதாகவும் அமுங்குவதாகவும் இருந்தது என்று இதில் சென்றவர்கள் கூறினார்கள்.


http://en.wikipedia.org/wiki/Mariana_Trench

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails