Saturday, March 29, 2008

காணாமல் போன பொருளை கண்டு பிடிக்க புதிய கணிணி சாப்ட்வேர்

திருடனை கண்டுபிடிக்கலாம்
லேப்டாப் எங்கே? சாப்ட்வேர் காட்டும்

புதுடெல்லி, மார்ச் 30: லேப்டாப் கம்ப்யூட்டர் இனி தொலைந்துவிட்டாலும் கவலை இல்லை. மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம். காரணம், லேப்டாப் எங்கே இருக்கிறது என காட்டும் சாப்ட்வேர்கள் நிறைய வந்து உள்ளன.
அந்த சாப்ட்வேரை லேப்டாப் கம்ப்யூட்டர்களில் சுலபமாக பொருத்தலாம். யுனிஸ்டால் போன்ற நிறுவனங்கள் இச்சேவையில் இறங்கி உள்ளன.
இந்த சாப்ட்வேர் பொருத்தப்பட்ட லேப்டாப் கம்ப்யூட்டர் தொலைந்துவிட்டால், யுனிஸ்டால் நிறுவனத்தின் சர்வர்களுக்கு ஒருவித சிக்னல் கிடைக்கும். திருடன் கம்ப்யூட்டரை இயக்க ஆரம்பித்ததுமே இந்த சிக்னல்கள் கிடைக்கும். கம்ப்யூட்டரின் ஐ.பி. முகவரி உதவியோடு, அது எங்கே இருக்கிறது என்பதை அறிய முடியும்.
இத்தனையுமே, லேப்டாப் எங்கே என காட்டும் சாப்ட்வேர்களை பொருத்தினால் மட்டும்தான் நடக்கும.¢ இந்த சாப்ட்வேரை உருவாக்க ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டதாக யுனிஸ்டால் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் விலை ரூ.3,000.
யுனிஸ்டால் சாப்ட்வேர் மட்டுமே அல்லாமல், `லெகேட் பிசி', `ஸ்னாப் பைல்ஸ்' சாப்ட்வேர்களிலும் இந்த வசதி உள்ளது. இதற்கு எந்த கட்டணமும் இல்லை.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails