Friday, March 28, 2008

வேகமாக குறைந்து வரும் தமிழர்கள், மலையாளிகள் எண்ணிக்கை .இப்படியே போனால் என்ன ஆகும்?????

 
வேகமாக குறைந்து வரும் தமிழர்கள், மலையாளிகள் எண்ணிக்கை .இப்படியே போனால் என்ன ஆகும்?????
 
 
கொல்கத்தாவில் தமிழர்கள், மலையாளிகள் எண்ணிக்கை குறைகிறது!
    

HowrahBridge and Monsoonclouds
கொல்கத்தா:  கொல்கத்தா நகரில் வசித்து வரும் தமிழர்களும், மலையாளிகளும் குறையத் தொடங்கியுள்ளனர். கொல்கத்தாவை விட்டு அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு வேகமாக வெளியேறத் தொடங்கியுள்ளதாக பிரபல வரலாற்று நிபுணர் பி.டி.நாயர் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் வசித்து வரும் பி.டி.நாயர் பிரபலமான வரலாற்று நிபுணர் ஆவார். கொல்கத்தாவின் வரலாறு, சமூகம், அரசியல், மதம், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து 42 நூல்களை இவர் எழுதியுள்ளார்.

கொல்கத்தாவின் நடமாடும் என்சைக்ளோபீடியா எனவும் இவர் செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் எழுதிய ஹிஸ்டரி ஆப் கல்கத்தா என்ற ஆய்வு நூல் மிகச் சிறந்த ஆய்வு நூலாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் கொல்கத்தாவில் பல்வேறு சமூகத்தினரின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாக நாயர் கூறியுள்ளார். குறிப்பாக தமிழர்களும், மலையாளிகளும் கொல்கத்தாவிலிருந்து வெளியேறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாயர் கூறுகையில், ஒரு காலத்தில் கொல்கத்தாவை நிர்மாணித்தவர்கள் கிரேக்கர்களும், ஆர்மீனியர்களும், யூதர்களும்தான். அவர்களது கட்டடக் கலைக்கு சிறப்பாக ஏராளமான கட்டடங்கள் இன்றும் கொல்கத்தாவுக்கு எழில் கூட்டிக் கொண்டுள்ளன. ஆனால் இன்று கிரேக்கர்கள் கொல்கத்தாவில் ஒருவர் கூட இல்லை.

யூதர்களின் எண்ணிக்கை 25 ஆக சுருங்கிவிட்டது. ஆர்மீனியர்களின் எண்ணிக்கை வெறும் 600 ஆக உள்ளது.

இன்னொரு முக்கிய சமூகமான தமிழர்களும், மலையாளிகளும் கூட இங்கிருந்து வேகமாக வெளியேறி வருகின்றனர். ஒரியர்களும் கூட கொல்கத்தாவை விட்டு வெளியேறி வருகின்றனர்.

கிரேக்கர்கள், ஆர்மீனியர்கள் வசம் இருந்து வந்த பல்வேறு சொத்துக்களும், சர்ச்சுகளும் விற்கப்பட்டு விட்டன. பலவற்றை, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை தன் வசம் எடுத்துக் கொண்டு விட்டது.

நகரிலேயே மிகவும் பழமையான கட்டடம் என்ற பெருமையைப் பெற்ற பிரபோர்ன் சாலை சர்ச் 1724ம் ஆண்டு கட்டபப்ட்டது. ஆர்மீனியர்களின் கட்டடக் கலைக்கு சிறந்த உதாரணமாக இது விளங்குகிறது.

முதன் முதலில் கொல்கத்தாவிலிருந்து மொத்தமாக வெளியேறியவர்கள் கிரேக்கர்கள்தான். அவர்கள் சென்ற பின்னர் அவர்கள் விட்டுச் சென்ற சர்ச்சும், பிற சொத்துக்களும் அரசுக்கு தானமாக வழங்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார் நாயர்.

இப்போது, தமிழர்களும், மலையாளிகளும் வேகமாக வெளியேறுவதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும் நாயர் தெரிவித்துள்ளார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails