ஐக்கிய நாடுகள் சபையும், வர்த்தகத் தலைவர்களும், அரபு உலகில் எயிட்ஸ் நோயினால் ஏற்படக் கூடிய சீரழிவு நிலை என்று தாம் கூறும் நிலையைத் தடுக்க அவசர நடவடிக்கை தேவை என்று அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அதிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், எயிட்ஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த சில வருடங்களில் மிகவும் அதீதமாக அதிகரிக்கும் என்று, ஜோர்தானில் நடக்கும், உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். அரபு நாடுகள் ஏற்கனவே உலகின் இரண்டாவது அதிக எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி நோய் வளர்ச்சி வீதத்தைப் பெற்றுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment