Monday, March 24, 2008

வெவரமான வேலைக்காரி-நடத்திய பாடம்(நகைச்சுவை)

ஒரு வீட்டிலே டெலிபோன் கட்டணம்(Telephone bill) வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக வந்துவிட்டது. எனவே வீட்டில் உள்ள அனைவருமே இதை குறித்து விவாதிக்க குடும்ப மீட்டிங்(meeting) வரும்படி அழைக்கப்பட்டனர்.

(இடம் பெறுவோர்: தந்தை, தாய், மகன், வேலைக்காரி)

தந்தை: இதை பாருங்கள். இது கொஞ்ச கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நீங்கள் அனைவரும் டெலிபோன் உபயோகிப்பதை குறைக்க வேண்டும். இந்த மாதிரி பில் அதிகமாக வரக்கூடாது என்றுதான் நம்ம வீட்டில் உள்ள போனை உபயோகிப்பதை தவிர்த்து, என் office-இல் இருக்கும் போனை உபயோகிக்கிறேன்.

தாய்: நானும் அப்படித்தான். எப்போவாவதுதான் நம்ம வீட்டு போனை உபயோகிக்கிறேன்.
மற்றபடி office போன் தான் உபயோகிக்கிறேன்.


மகன்: நானும் கூட, நம்ம வீட்டு போனை பயன்படுத்துவதே இல்லை. நான் எப்போதுமே என் கம்பெனி மொபைல் தான் உபயோகிக்கிறேன்.

வேலைக்காரி: அட என்னடா இது ஒரே ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது!!! எங்கு தான் பிரச்சனை? என்னதான் பிரச்சனை? ஒன்றும் புரியவில்லை. நாம் அனைவருமே நமது வேலை ஸ்தலங்களில் உள்ள போனை தானே உபயோகிக்கிறோம். அப்புறம் எப்படி இவ்வளவு பில் அதிகமாக வந்துள்ளது???
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails