Tuesday, March 18, 2008

camara mobil phone,காமிரா மொபைல் போன் வாங்குபவர்கள் ஜாக்கிரதை

 
 
 
//சைனா செல்பேசி நன்றாக உள்ளதாக கேள்விபட்டேன். (தெரிந்தவர்களிடம் அல்ல) எந்த நிறுவணத்துடையதை வாங்குவதாக இருந்தாலும் பழுதானால் எங்கு கொண்டு செல்வது என்பதை முன்னதாக விசாரிக்க வேண்டும். சைனா மட்டுமல்ல கொரியன் நிறுவணமும் வந்துள்ளது. ஆனால் ஒருமுறை கீழே விழுந்தாலும் காட்சி சரியாக தெரியாது என்பதும் கேள்வி பட்ட ஒன்றே. சற்று பொறுங்கள் அனேகர் வாங்கட்டும் பின் விசாரித்து வாங்கலாம்//
 
 
 
 
 
 
 
 
 
 
//கோமர மற்றும் புளுடுத்
மெமரி காட் போன்ற வசதிகள் உல்லது இது வாங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது எந்த பிரச்சனையும் இல்லை
mp3 மிகவும் அருமையாக கோட்கலாம் வீடியே வசதி குறைவுதான் எனினும் குறைந்த விலையில் சரியான தரம்


மோலும் தகவல் இங்கு
http://www.imobile.com.au/Future/default.asp?ID=futurefeb0712//

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
//சைனா மொபைல் போன்களின் விலை மிகக் குறைவு, மேலும் அதில் உள்ள வசதிகளைக் கொண்ட நோக்கியோ போன் குறைந்தது நான்கு மடங்கு விலைஅதிகமாக இருக்கும்.

உதாரணமாக MP3, Camera, Bluetouth, Video வசதிகொண்ட ஒரு மொபைலுக்கு குறைந்தது 10,000 தேவைப்படும். ஆனால் சைனா மொபைலுக்கு 3,000 மட்டும் போதும்.

நீங்கள் வாங்கும் கம்பேனி போனுக்கு ஒரு வருடம் வாரண்டிஉண்டு, ஒருவேளை சைனா போன் 4 மாதங்கள் மட்டும் உழைக்கும் என்றால் ஒரு வருடத்தில் 3 போன்கள் வாங்க வேண்டி இருக்கும். மேலும் இரு வாரங்களுக்கு ஒரு முறை போன் விலை மாற்றம் அடைகிறது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிய மாடல்கள் வரும் போது இன்னும் அதிகமாக குறையும். 6 மாதங்களில் நீங்கள் 10,000 ரூபாயக்கு வாங்கிய போன் சுமார் 5,000 லிருந்து 6,500 வரும் .இது புதிய போனின் விலை, இப்போது நீங்கள் 10,000 கொடுத்து வாங்கிய போனின் விலை 4,000 க்கு போகுமம். இப்போது உங்களுக்கு சுமார் 6,000 நஷ்டம்.

அதே சமயத்தில் சைனா போன் 3,000 வாங்கி இருந்தால், அது 6 மாதங்கள் உழைத்து, நீங்கள் விற்க வி்ரும்பினால் எப்படியும் 1,500 லிருந்து 2,000 வரை செல்லும்.

ஒருவேளை சுமார் 3 மாதத்தில் அது முற்றிலும் இயங்காமல் போனால், நீங்கள் 3,000 கொடுத்து மற்றொரு போன் வாங்க வேண்டி இருக்கும், மேலும் முதலில் 3,000 கொடுத்து வாங்கிய போன் இப்போது அதைவிட குறைவாக கிடைக்க வாய்பபு இருக்கிறது. மேலும் அந்த சமயத்தில் புதிய வசதிகளுடன் போனும் கிடைக்கும்(உதா: Duel SIM Card).

எனவே சைனா தான் போன் சிறந்தது.

(இது மாதரி கணிப்பீடுகளை கொண்ட ஒரு பாடம் கல்லுரியில் ஒரு செமஸ்டரில் இருக்கும் அது OR என்று சொல்லப்படும் Operations research, அதாவது ஒரு காரியத்தை செய்யமலேயே அதன் முடிவுகளை அலசி ஆராயந்து லாபமானதை தெரிந்து கொள்வது. இதை எழுதும் போது OR நினைவுக்கு வந்தது.)

போதுவாக ஒவ்வோரு வாரமும் விலையும் குறைந்து, புதிய மாடல்களும் வரும் இந்த நேரத்தில் சைனா போன் சிறந்தது. சில சமயங்களில் இது மாதரி பொருட்கள் வருடகணக்கில் கூட வரும் நம்ம் டெல்லி செட் மாதிரி.

உங்களுடைய தேவை அறிந்து வாங்குவதும் நல்லது, நீங்கள் பாட்டு கேட்க விரும்பினால் mp3 player வுடன் வாங்குவது நல்லது. (இது அதிகமாக பயணம் செய்பவர்களுக்கு மிகவும் உதவும்.). உங்கள் வீட்டில் குழந்தை இருந்தால் கேமிராவுடன் வாங்கவது நல்லது//
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails