Thursday, March 27, 2008

நாத்திகவாதியும்,ஆத்திகவாதியும்

நாத்திகவாதியான ஆசிரியர் ஒருவர் தன் வகுப்பறையில் இருந்த ஒரு கிறிஸ்தவ மாணவனைப் பார்த்து," நீ மரத்தை பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டார்.

"ஆம் பார்த்திருக்கிறேன்" என்று மாணவன் பதிலளித்தான்.

"சரி,சரி நீ சிறிய புல் பூண்டுகளைப் பார்த்திருக்கிறாயா?" என்று திரும்பவும் அவனிடம் கேள்வி கேட்டார்.

அவனும் " ஆம் பார்த்திருக்கிறேன்" என்று பார்த்திருக்கிறேன்" என்றான்.

" நீ கொஞ்சம் வெளியே சென்று வானத்தை பார்த்து வா" என்று அவனிடம் சொன்னவர், அவன் வெளியே சென்று திரும்பி வந்த பின்," நீ வானத்தை பார்த்தாயா" என்று கேட்டார்.

" ஆம், அது அங்கேயேதானே இருக்கிறது!" என்று அந்த மாணவன் பதிலளித்தான்.

சரி நீ இப்போது மீண்டுமொருமுறை வெளியே சென்று வானத்திலே கடவுள் தெரிகிறாரா? பார்! என்று அந்த நாத்திகண் கேட்டான்.

அவன் வெளியே சென்று பார்த்து," ஐயா என்னால் கடவுளைப் பார்க்க முடியவில்லை" என்று சொன்னான்.

"கடவுள் என்று ஒருவர் கிடையாது. அதனால் தான் உன்னால் அவரை பார்க்க முடிய வில்லை. என்று அந்த நாத்திகன் அவனைப் பார்த்து சொன்னான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு சிறியப் பெண் எழுந்து அந்த மாணவனைப் பார்த்து, "நான் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்கலாமா?" என்று கேட்டாள். திரும்ப திரும்ப கேள்விகள் கேட்கப்படுவதால் சலிப்படைந்த அந்த மாணவன் வேண்டா வெறுப்பாக சரி என்று சொன்னான்.

நீங்கள் மரத்தை பார்த்தீர்களா?

ஆம்.

நீங்க புல் பூண்டுகளை பார்த்தீர்களா?

ஆம்

நீங்க இப்போது இந்த ( நாத்திக ) ஆசிரியரை பார்க்கிறீர்களா?

ஆம். பார்க்கிறேன்.

அப்படியானால் அவருடைய மூளையை உங்களால் பார்க்க முடிகிறதா?

இல்லை என்னால் பார்க்க முடியவில்லை.

அப்படியானால் அவருக்கு மூளை இல்லை என்று அர்த்தமா????
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails