இணையத்தில் இஸ்லாம் பற்றிய எனது முதல் மடல்
http://groups.yahoo.com/group/Maraththadi/message/19355
> தொடர்ந்து இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதாக முன்பும், இப்போதும் சில வரலாற்று ஆசிரியர்கள் குறுகிய
மனப்பான்மையோடு எழுதி வைத்த வரலாறுகள், திட்டமிடப்பட்ட ஒரு சூழ்ச்சியின் விளைவே. இஸ்லாம் மத சகி
ப்புத் தன்மையை வலியுறுத்தும் மார்க்கம் என்பதற்கு, முதல் இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டதும், மதினாவில்
நபிகள் நாயகம் (ஸல்) வெளியிட்ட அறிக்கை ஒன்று மட்டுமே போதுமானது. "நமது குடியரசில் தம்மை
இணைத்துக்கொள்ளும் யூதர்களும் பாதுகாக்கப் படுவார்கள். அவர்கள் இங்குள்ள முஸ்லிம்களோடு சம உரிமை
பெற்றவர்களாவார்கள். அவர்கள் தங்கள் மார்க்கத்தை சுதந்திரமாக பின்பற்றிக்கொள்ளலாம். எல்லாக் கோத்தி
ரங்களையும் சேர்ந்த அனைத்து மதினா வாழ் யூதர்களும் முஸ்லிம்களோடு சேர்ந்து உருவாக்குகின்ற ஒரு நாடாக
இது இருக்கும்" என்ற மேற்கோளுடன் உலக வரலாற்றில் முதன் முதலாக மதச்சார்பற்ற, மத சகி
ப்புத்தன்மையுடைய ஒரு குடியரசை நிறுவி இவ்வுலகிற்கு அறிமுகம் செய்தது நபிகள் நாயகம் (ஸல்).
ஔரங்கசீப், திப்பு சுல்தான் ஆகியோரது மத சகிப்புத் தன்மையும், மதச்சார்பின்மையும்கூட இதில் விரிவான
ஆய்விற்கு உட்படுத்தப் பட்டுள்ளன.
>
ருமி,
உங்களது புத்தகத்தைப்படிக்காவிட்டாலும், அதைப்பற்றிய கட்டுரையை படித்தபோது எனக்குள் எழுந்த உணர்வுகளை
உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் கூறுவதில் தவறு எதாவது இருக்குமானால் சுட்டிக்
காட்டுங்கள்.
திருக்குரான் விஷயத்தில் பிந்தய சூராக்கள், முந்தய சூராக்களை nullify செய்கின்றன. எனவே, இஸ்லாம்
விஷயத்தில் பாதி உண்மை என்பது முழுப்பொய்க்குச் சமானம்.
யூதர்கள் விஷயத்தில் முதலில் நபிகள் சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்தது உண்மைதான். நீங்கள் குறிப்பி
ட்டுள்ளது போல மதீனா நகரில் அவர்களுக்கு சுதந்திரம் தந்ததும் உண்மைதான். ஆனால் அதற்குப்பின்னால் நி
கழ்ந்தவைகளை, குரான் யூதர்கள் பற்றி பல இடங்களில் சொல்பவைகளை நீங்கள் சொல்லியிருக்கவில்லை போல்
தெரிகிறது. குரான் யூதர்களை `குரங்குகள்' என்று குறிப்பிடுகிறது. பல சூராக்கள் அவர்கள் மீது வெறுப்பைப்
பொழிகின்றன. இது, இன்றளவும் இஸ்லாமிய உலகில் யூதர்களுக்கு எதிரான உணர்வை உண்டாக்கிக் கொண்டிருக்கி
றது.
யூதர்களின் தேவை ஆரம்பக்காலத்தில் நபிகளுக்கு தேவைப்பட்டபோது அவர்களுக்கு உரிமைகள் வழங்கபட்டன. பி
ன், அவரது வலு கூடிய போது, குரைஷிக்களுடன் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு யூதர்களின் தேவை குறைந்த
போது, அவர்கள் மீது ராஜத்துரோகக் குற்றம் சாட்டி, அவர்கள் அனைவரையும் கொன்று குவிக்க உத்தரவு
போட்டார். அவர்களது பெண்டு ,பிள்ளைகளை எதோ பண்டங்களை பகிர்வது போல அனைவருக்கும் பகிர்ந்து
(அடிமைகளாக) கொடுத்தார். இது அந்தக்கால வழக்கமாக இருக்கலாம். ஆனால், அதையே இன்றைய
முஸ்லீம்கள் பின்பற்றுகிறார்கள். ஒரு மதப்பற்று கொண்ட முஸ்லீமின் பார்வையில் நபிகள் செய்த செயல்கள்
எல்லாக்காலகட்டத்திற்கும் பொருந்தியவை. இதுவே இன்றளவுக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் ணிவேராக
இருக்கிறது.
நபிகள் புத்தகங்களுடையோருக்கு (people of the book - Christians and Jews) உரிமைகள் சி
லவற்றை பின் கொடுத்தது உண்மைதான். னால் அது அன்றைக்கு வேண்டுமானால் தாராளமானதொன்றாக இருந்தி
ருக்கக்கூடும். இன்றைய நிலையில் அவற்றை மிகவும் கொடூரமான செயல்கள் என்றுதான் மதிப்பீடு செய்ய
வேண்டியிருக்கிறது. உதாரணமாக ஒரு திம்மி கோர்ட்டில் சாட்சி சொல்ல முடியாது, அவனது மத வழி
பாட்டுத்தலத்தை இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தை விட உயர்வாக கட்டிக்கொள்ள முடியாது, முஸ்லீம்
ஒருவன் அவனை அடித்தால் திருப்பித்தாக்க முடியாது, ஒட்டகத்தில் உயர அமர்ந்து சவாரி செய்ய முடியாது..
இப்படிப்போகிறது அந்த `சலுகைகள்'.
இது இவ்வாறிருக்க, புத்தகங்களுடையோர் அல்லாத மற்ற மதத்தினருக்கோ இஸ்லாம் எந்த உரிமையும் வழங்குவதி
ல்லை. அவர்கள் சரி-மனிதர்களாகக் கருதப்படுவதில்லை. இதில், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அவுரங்க சீப்
செய்த மிகப்பெரிய சாதனை, இந்துக்களை திம்மிக்களாக பெரிய மனது செய்து ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஜி
ஸ்யா வரி விதித்து அவர்களது சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக க்கியது தான். அவுரங்கசீப்
எதையும் தானாக செய்யவில்லை. நபிகள் திம்மிக்களுக்கு எந்த உரிமைகளை மட்டும் கொடுக்கச்
சொன்னாரோ அதை மட்டுமே தந்தான். அதன் படி, இந்துக்களின் கோவில்கள் இடிக்கப்பட மாட்டாது. னால்
இருக்கிற கோவில்களை செப்பனிட முடியாது, மதுராவில் இருந்த ஏழு மாட கிருஷ்ணர் கோவில் மசூதியை விட
உயரமாக இருந்தது என்பதால், ஒரு சில மாடங்கள் மட்டும் விட்டு விட்டு மற்றவற்றை இடிக்க உத்தரவி
ட்டான். அவுரங்கசீப்பை ஒரு சூபியாக காட்ட முயற்சிக்காதீர்கள். அவனே இறக்கும் தருவாயில் தனது சிரி
யருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய மதவெறியால் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு வருந்தியிருக்கிறான்.
இந்த சரித்திரம் எல்லாம், நாம் அடித்துக்கொள்வதற்காக சொல்லவில்லை. இதிலிருந்து பாடம்
கற்றுக்கொள்வோம். எல்லா மதங்களிலும் நல்லவை தீயவை கலந்திருக்கின்றன. நல்லவை ஏற்று அல்லவை புறக்கணி
ப்போம். நபிகளது வாழ்வும் அப்படியே. அவர் தவறுகள் செய்திருக்கின்றார், சிலவற்றை அவரது வாழ் நாளி
லேயே உணர்ந்து திருத்திக் கொண்டும் இருக்கிறார்.
அவர் தவறே செய்திருக்க முடியாது என்று கூறுவது, அவரது வாழ்வை அப்படியே பின் பற்ற முயல்வது, அவரை
கடவுளுக்கு நிகராகக் கருதுவதற்கு சமம். இது இஸ்லாத்துக்கு விரோதமானாது. ஆனால் ஒசாமிவிலிருந்து
பாஷா வரை இதைத்தான், இந்த நபி வழிபாட்டைத்தான் செய்கிறார்கள். அல்லாவை திட்டினால் கூட ஒருவன்
தப்பிக்கலாம், நபிகளாரை குறைகூறினால் சாதாரண முஸ்லீம் கூட வன்முறையில் ஈடுபடுகிறான். கடவுளுக்கு நி
கராக, கடவுளையும் விட உயர்ந்த ஸ்தானம் முகம்மது நபிக்கு வழங்கப்படுவதைத்தான் நடைமுறையில் பார்க்கி
றோம்.
இஸ்லாமில் சீர்திருத்தம் ஏற்பட வேண்டும், அதை உங்களைப்போன்ற படித்தவர்கள், பண்பாளர்கள் முன்னெடுத்து
செய்ய வேண்டும். அப்படிச் செய்தீர்கள் என்றால், இஸ்லாமிய சமுதாயத்திற்கும், உலகிற்கும் உங்களது மி
கப்பெரிய ஜகாத்தாக (இறைக்கொடை) அது இருக்கும். உலகில் சமாதானமும் அமைதியும் ஏற்பட வழிவகுக்கும்.
நேசகுமார்
No comments:
Post a Comment