அரேபியாவின் லச்சணம்....
வஜஹா அல்--ஹூவைதர் ஒரு சவுதி அரேபிய எழுத்தாளர்.
'ஆஃபாக்' (aafaq) என்ற பத்திரிக்கையில் இன்று அவர் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.
'எப்போது' என்று இந்த கவிதைக்கு பெயரி்டப்பட்டுள்ளது.
அரபியில் எழுதபட்ட இந்த கவிதையை நான் நம் இணைய இழி இஸ்லாமிய தோழர்களுக்காக அர்ப்பணித்து இந்த இடுகையை இடுகிறேன்.
அரபி தெரிந்தால் அந்த கவிதையை இங்கே படியுங்கள்.
ஆங்கிலத்தில், அந்த கவிதையின் சுருக்கமான வடிவை இங்கே படியுங்கள்.
அந்த கவிதையில் என்னை கவர்ந்த வரிகள் தமிழில் இங்கே.
**********
எப்போது....
எப்போது, நகரத்தில் எங்கும் ஒரு தோட்டமும் இல்லை. ஆனால் ஒவ்வொரு மூலையிலும் மசூதி உண்டு - நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்...
எப்போது, பெண்கள் ஆண்களின் மதிப்பில் பாதி பொறுமானம் மட்டுமே உள்ளவர்கள், நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....
எப்போது, கண்களை (மட்டும்) பிறருக்கு காட்டியதற்காக, பெண்கள் பொதுவில் கசையடி கொடுக்கப்படுகிறார்களோ, நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....
எப்போது, ஒரு பெண்ணின் தலையை மூடுவது மற்ற எல்லா ஊழல் பிரச்சனைகளை விட முக்கியமோ, நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....
எப்போது, சிறுபான்மையினர் தாக்கப்பட்டு நசுக்கப்படுகின்றனரோ, அவர்கள் உரிமை கேட்டால் ஐந்தாம் படை என்று அவமானப்படுத்தப்படுகிறார்களோ, நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....
எப்போது, மக்கள் மனதில் ஒரு பயம் இடை விடாது இருந்துகொண்டே இருக்கிறதோ, நீங்கள் அரபு தேசத்தில் இருக்கிறீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்....
********************
http://ayemarathavan.blogspot.com/2007/02/blog-post_28.html
No comments:
Post a Comment