புராணங்கள் உருவானதன் ஆபாசக் காரணங்கள்!
பார்ப்பன மதக் கோட்பாடுகளில் ஆண் - பெண் வக்கரித்த உறவுகள்! - 2
இன்றைய இந்துமத கடவுள்களில் சில முன்கூட்டியே சிறுவழிபாட்டுத் தெய்வங்களாக இருந்து பின்னால் இந்துமயமானவை.. சில இந்துமதத்தின் தெய்வங்களாகவும் இருக்கின்றன.
உதாரணமாக நற்றிணையில், (பாடல்-82)
"முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல...
காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின்"
காட்டில் உறையும் தாய்த் தெய்வமான காடுகாளின் மகன் முருகு (முருகன்), மற்றொரு தாய்த்தெய்வமான வள்ளியை மனைவியாக்கினான். இங்கு முக்கியமாக முருகுவின் தாய் மட்டும் கூறப்படுகின்றது தந்தை பற்றித் தெரியாதநிலை காணப்படுகின்றது.
இதுபோல அப்பருடைய தேவார வரிகள், இதற்குச் சான்று தருகின்றது.
"செல்வியைப் பாகங்கொண்டார் சேந்தனை மகனாய்க் கொண்டார்
மண்ணினை உண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார்"
தாய்த் தெய்வமான செல்வி, முருகன், சேந்தன் (அய்யார்), மாயோன் போன்றவர்களுக்கிடையில் உறவுமுறையை இந்து மதம் ஏற்படுத்தியதைக் காட்டுகின்றது. எப்படி இந்துமதம் பின்னால் வளர்ச்சி பெற்றது என்பதை இது காட்டுகின்றது.
நாம் இனி இந்த வளர்ச்சியின் ஆபாசத்தையும், வக்கிரத்தையும் புராண மற்றும் இந்து வரலாற்று இலக்கியம் மூலம் ஆராய்வோம்.
இராமாயணத்தின் கதாநாயகன் இராமனின் பெயரில் ஒரு வானரக்கூட்டம் இன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றும், கற்பழித்தும் போடும் கூத்தின் பின்னால், இராமாயணப் புராண இலக்கிய வரலாறு மண்டிக்கிடக்கின்றது. இந்த இராமாயணம் உருவாகக் காரணம், விஷ்ணு தனது மனைவி இலட்சுமியைப் புணர்ந்ததால் ஏற்பட்டதாம். இதுபோல் கந்த புராணம் ஏற்பட காரணம் சிவன் உமாதேவியாருடன் நூறு வருடம் விடாமல் புணர்ந்து கொண்டிருந்ததால், வீரியமும் கர்ப்பமும் கொடுமை செய்துவிடும் என்று தேவர்கள் அஞ்சி முறையிட்டதால், கலவி முற்றுப்பெறுமுன் சிவன் நிறுத்தியதால் இந்திரியம் நிலத்தில் விழுந்து நிறைய ஆபாசமாகி இறுதியாகச் சுப்பிரமணியன் தோன்றவும், கந்தபுராணம் உருவாகவும் காரணமாகி விடுகின்றது. இந்த மாதிரி இந்து மத வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்;?!
இனி நாம் இராமாயணத்தைப் பார்ப்போம்;. இந்த இராமாயணம் இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தில் கட்டமைக்கப்பட்டது. இந்த இராமனின் சொந்தத் தந்தை தசரதன் அல்ல. தசரதன் மூன்று பெண்டாட்டியையும், 60 ஆயிரம் வைப்பாட்டிகளையும் வைத்திருந்தவன். மூன்று பெண்ணுக்கும் குழந்தை பிறக்காததால், சிரங்கன் இடம் மூன்று பெண்ணையும் ஒப்படைத்து யாகம் செய்தான். இந்த யாகத்தில் மூன்று பிண்டங்களைப் பிடித்து உண்ணக் கொடுத்ததால் மூவரும் கர்ப்பமாகிக் குழந்தை பெற்றனர் என்கிறது, இராமாயணம்.
இங்கு மூன்று பெண்களின் தந்தை சிரங்கன் என்பது, இன்று மரத்தைச் சுற்றி பிள்ளை பெறும் பக்தியின் பின்னால் வேறு ஆண்களுடன் புணர்ச்சி நடப்பதும், கர்ப்பம் தரிப்பதுமே நிகழ்கின்றது. தசரதன் அல்லாத சிரங்கனுக்குப் பிறந்த இராமனை, இராவணன் தங்கை சூர்ப்பநகை தன்னைத் திருமணம் செய்யும்படி கேட்டதால், அவளின் மூக்கு, முலை, முடி போன்றவற்றை வெட்ட உத்தரவிட்டதன் மூலம் இராமன், பெண்களைக் கொச்சைப் படுத்துகின்றான்.
நன்றி: http://www.tamilcircle.net/
No comments:
Post a Comment