கேரள மாநிலம் மலப்புரத் தைச்சேர்ந்தவர் சலிம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 2 வருடத் துக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. மனைவியுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார். திடீரென்று சலிமுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட் டது. குடும்பம் நடத்த கஷ்டப் பட்டார். இதனால் அரபு நாட்டில் வேலைக்கு போய் சம்பாதிக்கலாம் என மனைவி யோசனை கூறினார்.
இதையடுத்து கணவன்- மனைவி இருவரும் டிராவல் ஏஜெண்டு ஒருவரை சந்தித்தனர். அவர் சலிமின் மனைவிக்கு ஓமன் நாட்டில் வீட்டு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறி விசா எடுத்து கொடுத்தார். சலிம் மனைவியை விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தார்.
மனைவி ஓமன் போய்ச் சேர்ந்ததும் சில நாள் கழித்து கணவருடன் போனில் பேசி சொன்ன தகவல் சலிமுக்கு பேரிடியாக இருந்தது. வீட்டு வேலைக்காக அனுப்பி வைக் கப்பட்ட தன்னை விலை பேசி விபசார கும்பலிடம் விற்று விட்டதாகவும் தன்னால் இங்கு கொடுமை அனுபவிக்க முடிய வில்லை. எந்த நேரத்திலும் உயிரை மாய்த்துக் கொள்வேன்'' என்றார்.
இதையடுத்து சலிம், `உன்னை என்ன விலை கொடுத்தாவது மீட்டு விடுகிறேன்'' என்று கூறி மனைவிக்கு தைரியம் சொன்னார்.
அதன் பிறகு மனைவியை வெளிநாடு அனுப்பி வைத்த அதே ஏஜெண்டு மூலம் சலிமும் விசா எடுத்து ஓமன் நாடு சென்றார். அங்கு பல்வேறு விபசார புரோக்கர்களை மூலம் அணுகி தனது மனைவியின் இருப்பிடத்தை கண்டுபிடித் தார். மனைவி என்பது விபசார கும்பலுக்கு தெரிந்து விட்டால் நிலைமை மோசமாகி விடும் என்பதால் வாடிக்கையாளர் போல் சென்று மீட்க திட்ட மிட்டார்.
அதன்படி சலிம் சென்ற போது அவரது மனைவியை ஒரு சிறிய இடத்தில் அடைத்து வைத்து இருந்தனர். சலிமை கண்டதும் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
பின்னர் சலிம் இந்திய தூதரகம் மூலம் ஓமன் போலீசில் புகார் செய்து தனது மனைவியை மீட்டார்.
முதலில் சலிமின்மனைவி ரூ.70 ஆயிரத்துக்கு விற்கப் பட்டு இருக்கிறார். பின்னர் கேரளா வைச்சேர்ந்த பெண் புரோக்கர் ஒருவர் அவரை ரூ.20 ஆயிரத்துக்கு வாங்கி இருந்தார். தினமும் 30 பேர் வரை உல்லாசம் அனுபவித் துள்ளனர். அதற்கு மறுத்த தால் அடித்து உதைத்து சித்ர வதை செய்வார்கள்.
No comments:
Post a Comment