Saturday, March 29, 2008

புத்தர் பிராமணர்களை கொல்லச் சொன்னாரா?

பாப்பானை கொல்லச் சொன்ன புத்தர்!

சித்தார்த்தர் எனப்படுகிற கெளதமபுத்தர் ஆரம்பத்தில் பிராமண கலாச்சாரத்தைக் கண்டு அதிசயித்த போதிலும், பின்னர் அவற்றை அருவருக்கத்தக்கதாகவே கருதத் தொடங்கினார்.

30 - வயதான சித்தார்த்தர், தன் ஆடம்பரமான அரச வாழ்க்கையை உதறிவிட்டு கோசல நாட்டின் காடுகளில் அலைந்து திரிந்தார். உபனிடதங்களை வழங்கிய முனிவர்களின் கருத்துக்களை விரும்பிக் கேட்டார்.

செல்வ வளம் படைத்த மகத நாட்டு மன்னன் பிம்பிசாரரின் ஆதரவைப் பெற்றார். ஒருநாள் அரசவையில் அரசன் ஆசையோடு வளர்த்த 50- ஆடுகளை பலி கொடுக்குமாறு பிராமணன் ஒருவன் மன்னரை வற்புறுத்தினான். அரசன் பலி கொடுக்கும் எல்லாமே மேலுலகின் கடவுளுக்கு நேரடியாகச் செல்லும் என்றான் அந்த பிராமணன்.

அதைக்கேட்ட புத்தர் குறுக்கிட்டு, அப்பிராமணனின் தந்தை உயிரோடு இருந்தால் அவரை பலி கொடுத்து அதன்மூலம் அவரை சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். இதனைக் கண்ட அந்த பிராமணன் வாயடைத்துப் போனான். செய்வதறியாது திகைத்தான்.

புத்தரின் திறமையான வாதத்தால் அரசன் அன்போடு வளர்த்த ஆடுகள் காப்பாற்றப்பட்டது மட்டுமின்றி, பலிகொடுக்கச் சொன்ன பிராமணன் அரசவையிலிருந்தும் அடித்து வெளியேற்றப்பட்டான்.

இதன் மூலம் புத்தர் பிம்பிசாரரை தனது கொள்கையின் பக்கம் வென்றெடுத்ததாக "பாலி திருமுறை" ஒன்று குறிப்பிடுகிறது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails