Monday, March 17, 2008

1. ஏன் இஸ்லாமியர்கள் அதிகமாக கேள்விபதில் வசதியை செய்து கொடுத்துள்ளார்கள், கேள்வி‍பதில் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சியை நடத்துவதில்லை.

1. ஏன் இஸ்லாமியர்கள் அதிகமாக கேள்விபதில் வசதியை செய்து கொடுத்துள்ளார்கள், கேள்வி‍பதில் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட நிகழ்ச்சியை நடத்துவதில்லை.

"இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சிகளை" யார் யார் நடத்துகிறார்கள் என்று இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரையும், தமிழ் நாட்டிலுள்ளவர்களையும் கேட்டால், பெரும்பான்மையாக மாற்று மதத்தவர்களும் உடனே பதில் சொல்லிவிடுவார்கள். அதாவது, உலக அளவில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை திரு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் நடத்துகிறார். அதே போல, தமிழ் நாட்டில் (எனக்கு தெரிந்த மட்டில்) புகழ் பெற்ற நிகழ்ச்சியாகிய உள்ள "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்" என்ற நிகழ்ச்சியை திரு பி. ஜைனுல் ஆபீதீன் அவர்கள் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இந்த விவரங்கள் எல்லாருக்கும் தெரியும், இன்னும் பல நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்துக்கொண்டு இருக்கின்றன.

சரி, அப்படியானால், இப்படிப்பட்ட கிறிஸ்தவ கேள்வி பதில் நிகழ்ச்சிகளை யார் நடத்துகிறார்கள்? குறைந்த பட்சம் ஒரு பெயரைச் சொல்லுங்கள் ? என்று நாம் கேட்டால் பெரும்பான்மையாக "கிறிஸ்தவர்களிலிருந்தே" பதில் வராது? அது ஏன்? சரி கிறிஸ்தவ போதகர்கள், ஊழியர்களின் பெயரைச் சொல்லுங்கள் என்று கேட்டால், உடனே குறைந்தது 10 பேரின் பெயரை அதிகமாக சிந்திக்காமலேயே சொல்லிவிடுவார்கள் கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவர்களுக்கு சந்தேகங்கள் இல்லையா? மாற்று மதத்தவர்கள் கிறிஸ்தவ கேள்விகளை கேட்கமாட்டார்களா? என்ற கேள்விகள் எல்லாருக்கும் எழும்பும்.

இக்கட்டுரை முழுவதுமாக படிப்பீர்களானால், உங்களால் இவைகளுக்கு பதிலை கண்டுக்கொள்ளமுடியும்.

ஏன் இஸ்லாம் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறது, ஏன் கிறிஸ்தவம் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை? இந்த கேள்விக்கான பதிலை இனி பார்ப்போம். இஸ்லாமிய சகோதரர்கள் இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மேல் கோபப்படவேண்டாம், நான் எழுதுவதில் யதார்த்தம் உள்ளதா இல்லையா என்பதை சிந்தியுங்கள். இஸ்லாமியர்கள் அதிகமாக கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு 6 காரணங்கள் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த காரணங்களை மேலிருந்து கீழாக (Count Down 6 to 1) ஒவ்வொன்றாக விளக்குகிறேன்.

காரணம் 6: தீவிரவாதிகள் தங்கள் செயலுக்கு இஸ்லாமின் பெயரை பயன்படுத்துவதினால், "இஸ்லாம் அமைதி மதம்" என்பதை காட்ட பல நிகழ்ச்சிகள் தேவைப்படுகிறது:

ஏன் இஸ்லாமியர்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளை அதிகமாக நடத்துகிறார்கள் என்று சிந்திப்பீர்களானால், இதற்குள்ள பல காரணங்களில் இந்த ஆறாவது காரணமும் ஒன்று என்று நான் சொல்வேன்.

இஸ்லாம் அமைதி மார்கமா இல்லையா என்பதைப்பற்றி இங்கு நான் சொல்லவரவில்லை, தீவிரவாதிகள் தங்கள் ஒரு கையில் துப்பாக்கியுடனும், மறுகையில் குர்‍ஆனையும் ஏந்திக்கொண்டு நிற்பதைத் தான் சொல்கிறேன். "தீவிரவாதிகள் இஸ்லாமியர்கள்" இல்லை என்று இஸ்லாமியர்கள் கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் பேசுவார்கள். ஆனால், தீவிரவாதிகள் தங்களை "இஸ்லாமியர்கள்" என்று தான் உலகத்திற்கு அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். அல்லாவின் வழியில் தாங்கள் இந்த (தீவிரவாத) செயல்களை செய்கின்றனர் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.

இப்படி தீவிரவாதிகள் தங்களை ஒரு இஸ்லாமியர்களாக காட்டிக்கொள்வதால், இஸ்லாமிய அறிஞர்கள் "இஸ்லாமை பரப்புவதற்கு" இது ஒரு தடையாக இருப்பதால், பல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். மக்கள் இஸ்லாமை ஒரு அமைதி மார்க்கம் என்று 'அங்கீகரிக்கவேண்டும்' என்பதற்காக மக்களை கேள்விகள் கேட்கச்சொல்லி அதற்கு பதில் அளித்து வருகின்றனர்.

எந்த ஒரு இஸ்லாமிய கேள்வி பதில் நிகழ்ச்சியை பாருங்கள், குறைந்த பட்சம் ஒரு கேள்வியாவது மாற்று மத நண்பர்கள் "இஸ்லாமிய தீவிரவாதிகள் பற்றி, ஜிஹாத் பற்றி" கேட்பார்கள். அதாவது, மாற்று மத அன்பர்களின் மனதில் "இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம்" என்பதை தீவிரவாதிகள் விதைத்துவருகின்றனர்.இஸ்லாமை ஒரு தீவிரவாத மார்க்கமாக இஸ்லாமியர்கள் காட்டினாலும், வலியவந்து மாற்று மதத்தவர்கள் "இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமாக" கருதவேண்டும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதற்காக ஊடகங்கள் தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆக, இஸ்லாமுக்கு தீவிரவாதிகள் கொண்டுவரும் கெட்டபெயரை மாற்றவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் மூலமாக இஸ்லாமிய அறிஞர்கள் நடத்திவருகின்றனர். இப்படிப்பட்ட தீவிரவாதிகள் "இஸ்லாமியர்கள் இல்லை, இது தவறு, இஸ்லாம் இதை அனுமதிப்பதில்லை" என்று சொல்லிவருகின்றனர்.

கிறிஸ்தவத்தை எடுத்துக்கொண்டால், இப்படிப்பட்ட பிரச்சனை இல்லை. கிறிஸ்தவ பெயரை பயன்படுத்தி யாரும் தீவிரவாத செயலில் ஈடுபடுவதில்லை, ஒரு கையில் துப்பாக்கியுடம், மறு கையில் பைபிளை ஏந்திக்கொண்டு யாரும் போஸ் கொடுப்பதில்லை."அமெரிக்கா போன்ற நாடுகளின் தலைவர்கள் கிறிஸ்தவர்கள் தான், அவர்கள் செய்யும் அராஜத்திற்கு அளவே இல்லை" என்று சிலர் சொல்லலாம். ஆனால், அவர்கள் ஒரு அரசாங்க தலைவராக இருந்து செய்கின்றனர், நான் செய்யும் செயல்களுக்கு பைபிள் தான் காரணம் என்று சொல்வதில்லை. எனவே, சாதாரண மக்கள் இதை பெரிய தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். எனவே, கிறிஸ்தவர்களுக்கு கெட்டபெயரை உண்டாக்க தீவிரவாதிகள் இல்லை.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவர்களால் தொடரப்பட்ட "குருசேடர்கள்" யுத்தம் பற்றி என்ன சொல்வீர்கள் என்று யாரும் கிறிஸ்தவத்தின் மீது குற்றம் சுமத்தவும் வாய்ப்பு இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள், 1) பைபிள் இதை அனுமதிப்பதில்லை, 2) தற்கால எந்த கிறிஸ்தவ போதகரும் அதை சரி என்றுச் சொல்லி, இப்போதும் அது போல கிறிஸ்தவர்கள் போர்கள் இயேசுவிற்காக செய்யலாம் என்று வக்காளத்து வாங்குவதில்லை.

எனவே, கிறிஸ்தவத்திற்கு அதிகமாக கேள்வி பதில் நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் மனதில் விதைக்கப்பட்ட விதையை எடுக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால், இஸ்லாமுக்கு அவசியமுண்டு, இன்னமும் இருக்கும்.


No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails