Monday, May 5, 2008

சூரியனுக்கு விண்கலம், அமெரிக்கா அனுப்புகிறது


2015-ம் ஆண்டில்
சூரியனுக்கு விண்கலம், அமெரிக்கா அனுப்புகிறது


வாஷிங்டன், மே.6-

சூரியனை பற்றி ஆராய்வதற்காக விண்கலம் ஒன்றை 2015-ம் ஆண்டில் அனுப்பப்படும் என்று அமெரிக்காவின் நாசா அறிவித்து உள்ளது.

நாசா முடிவு

அமெரிக்காவும், ரஷியாவும் இதுவரை செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிரகங்களுக்கும், சந்திரனுக்கும் விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு உள்ளன. சூரியனுக்கு விண்கலங்களை எந்த நாடும் அனுப்பியது கிடையாது. சூரியன் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதும், அதன் வெப்பநிலையும் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்புவது குறித்து நினைத்துப்பார்த்தது கிடையாது.

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்ப முடிவு செய்து இருக்கிறது. சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பி ஆராய்ச்சி செய்வது சூரியனை பற்றி நாம் அறிந்ததை விட அதிகமான தகவல்கள் கிடைக்கும் எனறும், இந்த கண்டுபிடிப்பு பெரும்புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அறிவியல் அறிஞர்கள் நம்புகிறார்கள்.

ரூ.3 ஆயிரம் கோடி செலவில்

2600 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை தாங்கக்கூடிய அளவு வெப்பத்தடுப்பு தகடுகள் மூலம் பாதுகாக்கப்பட்ட விண்கலம்,சூரியனுக்கு மிக அருகில் செல்லக்கூடும். அப்போது அது வினாடிக்கு 125 மைல் வேகத்தில் சூரியனை சுற்றி வரும்,

சூரியன் பற்றிய ஆராய்ச்சிக்கான திட்ட மேலாளராக ஆன்ட்ரூ டான்ட்ஸ்லர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த திட்டத்துக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதற்கான விண்கலத்தை வடிவமைத்து உருவாக்கும் வேலைகளை ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் அப்ளைடு பிசிக்கல் லேபரட்டரி செய்து வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் விண்கல வடிவமைப்பு வேலைகள் முடிவு அடைந்து விட்டன. சூரிய சக்தி மூலம் இயங்கும் இந்த விண்கலத்தின் எடை 453 கிலோ ஆகும்.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=410994&disdate=5/6/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails