Tuesday, May 6, 2008

கற்பழித்துக் கொல்லப்பட்ட இங்கிலாந்து பெண் ஸ்கார்லெட் கீலிங்கின் கொலை வழக்கு பாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கவுள்ளனர்.

 

ல்கார்லெட் கொலை வழக்கு படமாகிறது   
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

Scarlett
கோவாவில் பரிதாபமான முறையில் கற்பழித்துக் கொல்லப்பட்ட இங்கிலாந்து பெண் ஸ்கார்லெட் கீலிங்கின் கொலை வழக்கு பாலிவுட்டில் திரைப்படமாக எடுக்கவுள்ளனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டீன் ஏஜ் பெண் ஸ்கார்லெட். கோவாவுக்கு சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் தனது உடன் வந்தவராலேயே கற்பழிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார் ஸ்கார்லெட்.

ஸ்கார்லெட் மரணம், பெரும் சர்ச்சைகளையும் சலசலப்புகளையும் ஏற்படுத்தியது. ஸ்கார்லெட் மரணம் குறித்து கோவா போலீஸார் சரியான முறையில் விசாரிக்கவில்லை என்று அவரது தாயார் பியோனா குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் பாலிவுட்டில் ஸ்கார்லெட்டின் மரணத்தை படமாக்க உள்ளனர். பிரபாகர் சுக்லா என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார். காத்ரீனா கைப், ஸ்கார்லெட் வேடத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

ஸ்கார்லெட்டின் மரணத்தை கருவாகக் கொண்டு பாலிவுட்டுக்கேற்றபடி பல விஷயங்களை சேர்த்து இப்படத்தை உருவாக்கவுள்ளாராம் பிரபாகர் சுக்லா.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails