சோமாலியா நாட்டின் அல்கொய்தா தலைவர் பலி
அமெரிக்க போர் விமானங்கள்
குண்டு வீசியதில்
வாஷிங்டன், மே.2-
ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியாவில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய விமான தாக்குதலில் அந்த நாட்டின் அல்கொய்தா தலைவர் ஏடன் ஹாஷி அய்ரோ கொல்லப்பட்டார். மற்றும் 24 பேர் பலியானார்கள். அல்கொய்தா இயக்கத்தின் சகோதர அமைப்பான அல் ஷகாப் இயக்கத்தை அய்ரா நடத்தி வந்தார். இந்த இயக்கம் ராணுவத்தின் மீதும்,சோமாலியாவின் நட்பு நாடான எத்தியோப்பியா மீதும் தாக்குதல் நடத்திவந்தது.
சோமாலியா நாட்டில் உள்ள டுசாமரெப் நகரில் நகரின் மீது அமெரிக்க போர்விமானங்கள் குண்டு வீசியதில் எங்கள் இயக்கத்தின் முக்கியமான 2 பேர் பலியானார்கள் என்று ஷஹாப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
சோமாலியா நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த முகமது சியாத் பாரெய்ன் ஆட்சியை தீவிரவாதிகள் 1991ம் ஆண்டு கவிழ்த்தனர். அது முதல் அந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. தீவிரவாதிகள் கை ஓங்கியது. அந்த நாட்டு தீவிரவாதிகள் கென்யாவில் 1998-ம் ஆண்டு நடத்திய தற்கொலை தாக்குதலில் 224 பேர் பலியானார்கள்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=410086&disdate=5/2/2008
No comments:
Post a Comment