Thursday, May 1, 2008

பின்லேடன் மகன் இங்கிலாந்தில் குடியேறுவதற்கு தடை



லண்டன், மே.2-

பின்லேடன் மகன் ஒமர், இங்கிலாந்து நாட்டு மனைவியுடன் வசிப்பதற்காக அந்த நாட்டில் குடியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

52 வயது பெண்ணுடன் திருமணம்

பின்லேடன் மகன் ஒமர் ஒசாமா பின். 27 வயதான அவர் எகிப்தில் வசித்தபோது, அந்த நாட்டை சுற்றிபார்க்க வந்த ஆங்கிலேய பெண் ஜேன் பெலிக்ஸ் பிரவுன் என்ற பெண்ணைச் சந்தித்தார். இந்த சந்திப்பு காதலாக மாறியது. ஜேன் தன்னை 25 வயது மூத்தவர் என்பது கூட ஒமருக்கு பெரிய குறையாக தெரியவில்லை. இருவரும் கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு எகிப்து நாட்டில் இருவரும் குடும்பம் நடத்தத் தொடங்கி உள்ளனர்.

ஒமரின் மனைவி முஸ்லிம் மதத்துக்கு மாறினார். தன் பெயரையும் செய்னா அல்சபா பின்லேடன் என்று மாற்றிக்கொண்டார். இருவரும் இங்கிலாந்து நாட்டுக்கு சென்று வாழ திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஒமருக்கு விசா கேட்டு செய்னா மனு செய்து உள்ளார். விசா கிடைக்கும் வரை இருவரும் எகிப்து நாட்டில் தங்குவது என்று முடிவு செய்து உள்ளனர்.

விசா வழங்க மறுப்பு

ஒமருக்கு விசா வழங்குவதற்கு இங்கிலாந்து அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர் அந்த நாட்டுக்குள் நுழைவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் தடை விதித்து உள்ளது. அவர் இங்கிலாந்து நாட்டுக்கு குடியேறினால் அது பொதுமக்களுக்கு கவலை அளிக்கும் என்று அதிகாரிகள் கருதுகிறார்கள்.

ஒமர் தன் தந்தைக்கு தொடர்ந்து விசுவாசமாக இருக்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்கு கிடைத்து உள்ளன என்றும் அதிகாரிகள் ஒமரிடம் கூறி உள்ளனர்.

அப்பீல்

தனக்கு விசா வழங்கப்படாததை எதிர்த்து ஒமர் அப்பீல் செய்து இருக்கிறார். என் தந்தையை காரணம் காட்டி எனக்கு விசா வழங்காதது தவறு என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள செஷைர் நகரில் என் பிரிட்டிஷ் மனைவியுடன் வசிப்பதற்கு எனக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று அவர் கேட்டு இருக்கிறார்.

 
http://www.dailythanthi.com/article.asp?NewsID=410092&disdate=5/2/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails