Thursday, May 1, 2008

குண்டு வீசிவிட்டு வந்ததும் குட்டி விமானத்தை தனித்தனியே பிரித்து எடுத்த விடுதலைப்புலிகள்: டிராக்டரில் ஏற்றிச்சென்றனர்

 

யாழ்ப்பாணம், மே. 1-

விடுதலைப்புலிகளிடம் செக் நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 குட்டி விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் 4 பேருடன் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் ஆற்றல் கொண் டது.

இந்த குட்டி விமானங்களை விடுதலைப்புலிகள் 2 இருக்கைகளுடன் மாற்றி நவீனப்படுத்தி உள்ளனர். நள்ளிரவிலும் குறி தவறாமல் குண்டு வீசும் நவீன வசதிகள் இந்த குட்டி விமானங்களில் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்தி ரேலியாவில் பயிற்சி பெற்ற விடுதலைப்புலிகளின் சிறப்பு படை இந்த குட்டி விமானங்களை இயக்கி வருகிறது.

சிங்கள ராணுவத்தின் குண்டு வீச்சு விமானங்கள், பீரங்கிகளை அழிக்க விடு தலைப்புலிகள் தங்களது குட்டி விமானங்களை பயன்படுத்துகின்றனர். கடந்த 25-ந்தேதி விடுதலைப்புலிகள் தங்களது 5-வது வான் வழித்தாக்குதலை நடத்தினார்கள்.

அன்று அதிகாலை 1.25 மணிக்கு விடுதலைப் புலிகளின் 2 குட்டி விமானங் களும் முல்லைத் தீவில் இருந்து புறப்பட்டன. 1.32 மணிக்கு அவை மணலாறு பகுதியில் உள்ள சிங்கள ராணுவத்தின் முன்னரங்கு நிலைகள் மீது 2 குண்டுகளை வீசியது. சிங்கபுர பகுதியில் மற்றொரு குண்டு வீசப்பட்டது.

பீரங்கிகளை தகர்க்கவே விடுதலைப்புலிகள் திட்ட மிட்டிருந்தனர். ஆனால் இந்த தடவை அந்த இலக்கை புலிகளின் வான்படையால் எட்ட இயலவில்லை. எனவே 2 குட்டி விமானங்களும் திரும்பி சென்று விட்டன.

விடுதலைப்புலிகள் கிரணைமேடு காட்டுக்குள் மிகப் பெரிய விமான ஓடு பாதை அமைந்திருந்தனர். அதை சில மாதங்களுக்கு முன்பு சிங்கள ராணுவம் குண்டு வீசி அழித்தது. இதனால் விடுதலைப்பலிகள் முல்லைத்தீவில் இருந்து 7 கி.மீ. தொலைவில் முள்ளியவளையில் புதிய விமான ஓடுபாதை அமைத் துள்ளனர்.

கடந்த 25-ந்தேதி விடுதலைப்புலிகள் இந்த புதிய விமான ஓடுபாதையை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. 1.50 மணிக்கு 2 குட்டி விமானங்களும் திரும்பி வந்த போது முள்ளிய வளையில் சில விளக்குகளை எரிய விட்டு விமானங்களை புலிகள் தரை இறக்கி உள்ளனர்.

அதன் பிறகு மின்னல் வேகத்தில் குட்டி விமானத்தின் பாகங்கள் தனித்தனியாக பிரித்து எடுக்கப்பட்டன. அவற்றை புலிகள் டிராக்டர்களில் ஏற்றி வேறு, வேறு திசைகளில் எடுத்துச் சென்று விட்டனர். அந்த டிராக்டர்கள் அடர்ந்த காட்டுக்குள் சென்று விட்டதாக தெரிகிறது.

இதன் மூலம் விடுத லைப்புலிகள் தங்கள் குட்டி விமானங்களை வைத்து இருப்பதும் தேவைப்படும் போது மட்டும் ஒருங்கிணைத்து பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. இது சிங்கள ராணுவத்துக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails