Thursday, May 8, 2008

தமிழ் பெயரில் லண்டனில் ஓட்டல்-சிறந்த உணவு விடுதியாக தேர்வு


தமிழ் பெயரில் லண்டனில் ஓட்டல்
சிறந்த உணவு விடுதியாக தேர்வு


லண்டன், மே.8-

டெல்லியை சேர்ந்த ரோஹித் கட்டார் என்பவர் லண்டனில் பல்வேறு பெயர்களில் ஓட்டல்களை நடத்தி வருகிறார். அவற்றில் ஒன்றுக்கு தாமரை என்று பெயர் சூட்டி இருக்கிறார். இந்த ஓட்டலில் அனைத்து ஆசிய நாடுகளின் உணவு வகைகளும் கிடைக்கும். இரவு நேர கிளப்பும், கலைக்கூடமும் உள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஓட்டல் லண்டனின் சிறந்த இரவு நேர உணவு விடுதியாக தேர்ந்து எடுக்கப்பட்டது. இந்த தேர்வு எங்கள் குழுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அந்த ஓட்டலின் பொதுமேலாளர் அன்ஷுமன் சக்ஷேனா தெரிவித்தார்.

 

 http://dailythanthi.com/article.asp?NewsID=411402&disdate=5/8/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails