Thursday, May 8, 2008

உயிர் வாழுவதற்காக உடலை விற்று பிழைக்கும் ஈராக் பெண்கள்

உயிர் வாழ உடல் விற்றல்
 
Iraqi girls in at a night club in Damascus
பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படும் இராக்கியப் பெண்கள் பலர் இளம் பிராயத்தினர்
யுத்தம் காரணமாக இராக்கிலிருந்து வெளியேறி சிரியாவில் ஏழ்மையில் வாடும் இராக்கிய அகதிகள் பிழைப்புக்காக பாலியல் தொழிலில் இறங்கிவரும் அவலநிலை குறித்த அலசல்.

 

Survival Sex, உய்தலுக்காக பாலியல் தொழில் என்கின்ற இந்தப் பதம்தான் இராக்கில் இருந்து வந்து சிரியாவில் தங்கியிருக்கின்ற அகதிகளைக் கையாள்கின்ற தொண்டு நிறுவன அதிகாரிகளால் தற்போது பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொல்லாகும்.

சில அகதிக் குடும்பங்கள் உணவுக்காக, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக பாலியல் தொழிலில் எந்த அளவுக்கு ஈடுபடுகிறார்கள் என்பதை விபரிப்பதற்காக இந்தப் பதம் அங்கு பயன்படுத்தப்படுகின்றது.

15 லட்சம் இராக்கியர்கள் தற்போது சிரியாவில் வாழ்கிறார்கள், இவர்களில் பெரும்பாலானோர் அண்மைய வருடங்களில் ஏற்பட்ட மோதல்களால் இடம்பெயர்ந்து இங்கு வந்து தங்கியிருப்பவர்களாவர்.

இவர்களில் எத்தனைபேர் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்த சரியான புள்ளிவிபரங்கள் இல்லாதபோதிலும், தற்போது அதிகரித்து வரும் கவலைகளுக்கான ஒரு முக்கிய காரணமாக இந்த விவகாரம் திகழ்வதாக டமாஸ்கஸில் இருக்கின்ற ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2008/04/080418_survivalsex.shtml

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails