Thursday, May 8, 2008

கார் ஓட்டும் 3 வயது சிறுமி


கார் ஓட்டும் 3 வயது சிறுமி


பல்கேரியா நாட்டில் பேலி லோம் நகரைச் சேர்ந்தவர் ஜ×ர்செல். 27 வயதான இவருக்கு 3 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இவள் பெயர் கரோலினா. அவர் காரை விட்டு இறங்கி பொருள்கள் வாங்குவதற்காக சென்றபோது சிறுமி கரோலினா காரில் டிரைவர் இருக்கையில் ஏறி உட்கார்ந்து கொண்டு என்ஜினை ஆன் செய்தாள். எஸ்கலேட்டரில் காலை வைத்து அழுத்தி காரை ஓட்டத்தொடங்கினாள். அவள் மார்க்கெட் பகுதியில் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு காரை ஓட்டிச் சென்றாள். அவளுடன் காரில் அவளது பெரியம்மாவின் 4 மற்றும் 6 வயது மகள்கள் இருந்தனர்.

காரை அவள் ஓட்டிச்சென்று வழியில் குறுக்கிட்ட ஆற்றில் இறக்கி விட்டாள். தண்ணீருக்குள் சென்றதும் கார் நின்றுபோய் விட்டது. இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் சிறுமிகளை காரில் இருந்து காப்பாற்றினார்கள். இதில் யாரும் காயம் அடையவில்லை.

 

 http://dailythanthi.com/article.asp?NewsID=411404&disdate=5/8/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails