Wednesday, May 7, 2008

புலிகள் தலைவர் கைது

புலிகள் தலைவர் கைது

.

 
.
 லண்டன், மே 7: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவர் லண்டனில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.  ஆயுதம் வாங்குவதற்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடு பட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப் பட்டுள்ளது.
.
இலங்கையில் தனி ஈழம் கோரி போராடி வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஏ.சி. சாந்தன்.

இவர் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவராக இருந்த மறைந்த ஆண்டன் பாலசிங்கத் துடன் இணைந்து லண்டனில் செயல்பட்டு வந்தார்.

கடந்த 2006ம் ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சு வார்த்தையில் அவர் ஆண்டன் பாலசிங்கத்துடன் கலந்து கொண்டார்.

51 வயதாகும் சாந்தனை வில்ட் ஷயர் என்ற இடத்தில் வில்ட்ஷயர் போலீஸ் மற்றும் லண்டன் தீவிரவாத எதிர்ப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது கைது செவ்வாயன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் பயங்கர வாத நடவடிக்கைகளுக்கு ஆயுதம் வாங்குவதற்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சாந்தன் மீது குற்றம்சாட்டப் பட்டுள்ளது.

கடந்த மாதம் 29ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த 3 பேர் லண்டனில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாந்தன் லண்டனில் கைது செய்யப் பட்டார். பின்னர் அவர் நவம்பர் மாதம் ஜாமீனில் விடுதலையானார்.

 சாந்தன் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட இருப்பதாக வில்ட்ஷயர் போலீசார் கூறியுள்ளனர்.

லண்டனில் கைது செய்யப் பட்டுள்ள சாந்தன் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினர் ஆவார்.

சாந்தனின் மனைவியும், பிரபாகரனின் மனைவி மதிவதனியும் ஒன்றுவிட்ட சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.maalaisudar.com/newsindex.php?id=13133%20&%20section=1

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails