Wednesday, May 7, 2008

தங்ககாசு மோசடியில் சிக்கிய தெலுங்கு நடிகர்-நடிகைகள்

 

நகரி, மே. 7-

சென்னை கோல்டு குவெஸ்ட் நெட் நிறுவனத்தில் தமிழ்நடிகர்-நடிகைகள் பலர் தங்க காசுகள் வாங்கி உள்ளனர். இதில் பல நடிகர்- நடிகைகள் ஏஜெண்டுக ளாக செயல்பட்டு வந்ததும் தெரிய வந்தது. அவர்கள் யார், யார்ப என்று போலீசார் பட்டியல் தயாரித்து வருகிறார்கள்.

இது போல தெலுங்கு நடிகர்-நடிகைகள் பலர் தங்ககாசு நிறுவனத்தின் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் மூலம் ஆயிரக்கணக்கான தங்க காசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நடிகர் சந்திரமோகன் அவரது மனைவிஜலந் தரா ஆகியோர் ஏஜெண் டாக செயல்பட்டு வந்துள் ளனர். இதே போல நடிகை ஜெயசுதா, நடிகர் ராஜேந்திர பிரசாத் உள்பட பல நடிகர்-நடிகைகள் ஏராளமானோர் தங்ககாசு சங்கிலி தொடர் திட்டத்தில் சேர்த்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

தெலுங்குபட தயாரிப் பாளர்கள், அரசியல்வாதிகள் பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.

ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணி புரியும் ஊழியர்கள், போலீசார் கூட இந்த தங்ககாசு சங்கிலி தொடர் திட்டத்தில் பணம் கட்டி ஏமாந்துள்ளனர்.

தெலுங்கு நடிகைஒருவர் கூறும்போது, கோல்டு குவெஸ்ட் நெட் நிறுவ னத்தின் தங்க காசு திட்டத்தில் தெலுங்கு நடி கர்-நடிகைகளை சேர்த்தது தமிழ் நடிகர்-நடிகைகள்தான் அவர்கள் வற்புறுத்தியதால் தான் தங்ககாசுகளை வாங் கினோம்.

இந் நிறுவனம் இந்தியா முழுவதிலும் பெரிய அளவுக்கு மோசடி செய்திருப் பதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தோம் என்றார்.

ஐதராபாத் போலீசார் கோல்டு குவெஸ்ட்நெட் நிறு வனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்ககாசு மோசடியில் தொடர்புடைய நடிகர்-நடிகைகள் பட்டிய லையும் தயாரித்து வருகி றார்கள். இதனால் தங்க காசு நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக செயல்பட்ட நடிகர்-நடிகைகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails