Wednesday, May 7, 2008

கரோலினா: ஒபாமா, இன்டியனா: ஹிலாரி

கரோலினா: ஒபாமா, இன்டியனா: ஹிலாரி
.
 
.
வாஷிங்டன், மே 7: ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதில் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது.
.
அங்கு நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் வடக்கு கரோலினாவில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார். இன்டியானாவில் அவரை எதிர்த்து போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் முன்னிலை பெற்றுள்ளார்.

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

ஆனால் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதில் பாரக் ஒபாமாவுக்கும் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

வேட்பாளரை தேர்வு செய்ய நடைபெற்று வரும் வாக்குப்பதிவுகளில் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வருவதால் இழுபறி நிலவி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற வாக்குபதிவுகளில் வெற்றி பெற்று ஹிலாரி முன்னிலை பெற்றிருந்தார்.

ஆனால் இன்று நடைபெற்ற வடக்கு கரோலினா மற்றும் இன்டியானா மாகாண வாக்குப்பதிவில் கரோலினாவில் ஒபாமாவும், இன்டியானாவில் ஹிலாரியும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது. அடுத்த வாரம் மேற்கு விர்ஜினியாவில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails