| பாரதியாரின் அபூர்வ கடிதங்கள் வெளியீடு | |||||
இந்து பத்திரிகையில், பாரதியார் எழுதிய கடிதங்கள் மற்றும் கட்டுரைகள், 'இந்து நாளிதழில் பாரதியார் எழுத்துக்கள்' என்ற பெயரில் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்து பத்திரிகை ஆசிரியருக்கான 16 கடிதங்கள், இரண்டு பகிரங்கக் கடிதங்கள் மற்றும் இரண்டு கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கடிதங்கள் பாரதியாரின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் இருந்ததாகக் கூறுகிறார் இந்த நூலைத் தொகுத்துள்ள வெங்கடாச்சலபதி. தேச விடுதலை, தாய்மொழிக் கல்வி போன்ற விடயங்களை இந்த ஆக்கங்களில் பாரதியார் வலியுறுத்திக் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாரதியாரின் இந்த கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் குறித்த வெங்கடாச்சலபதி அவர்களின் செவ்வியை நேயர்கள் கேட்கலாம். | |||||
Thursday, May 8, 2008
பாரதியாரின் அபூர்வ கடிதங்கள் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)

வெங்கடாச்சலபதி செவ்வி


No comments:
Post a Comment