Thursday, May 8, 2008

தேர்தல் செலவுக்கு ஹிலாரி ரூ. 26 கோடி கடன் வாங்கினார்

 

வாஷிங்டன், மே. 8-

அமெரிக்க அதிபர் தேர்தல் ஜனநாயக கட்சி வேட் பாளருக்கான தேர் தலில் ஹிலாரி போட்டியிடுகிறார். அவருக்கும், ஒபாமாவுக் கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. யார் வெற்றி பெறுவார் என்று சொல்ல முடியாத அளவுக்கு இழுபறி நிலைமை நீடிக்கிறது.

இதில் எப்படியாவது வெற்றி பெற்று அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ஹிலாரி தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதற்காக தீவிர பிரசா ரத்தில் அவர் இறங்கினார். பிரசார செலவுக்கு பணம் இல்லாமல் பாங்கியில் ஏராளமாக கடன் வாங்கி உள்ளார். கையில் இருந்த பணத்தை செலவு செய்தது போக ரூ. 26 கோடி கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.

ஏப்ரல் 11-ந்தேதி ரூ. 20 கோடியும், மே 1-ந்தேதி 4 கோடியும், அதன் பிறகு ரூ. 2 கோடியும் கடன் வாங்கி இருக்கிறார். இன்னும் 6 மாகாணங் களில் தேர்தல் நடக்க வேண்டியது இருக்கிறது. அதற்கும் அதிக பணம் செல வாகும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

ஹிலாரி தேர்தல் பிரசாரம் தொடங்கும் போது ரூ. 120 கோடி பிரசாரத்துக்காக வைத்து இருந்தார். அவை அனைத்தும் ஏற்கனவே செலவாகி விட்டது. தேர்தல் செலவுக்காக பணத்தின் ஒரு பகுதியை நன்கொடை மூலமும், இசை நிகழ்ச்சிகள் நடத்தியும் அவர் திரட்டினார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails