Wednesday, May 7, 2008

பிரபல நிதி நிறுவனத்தில் பெண்கள் உடை மாற்றுவதை படம் பிடித்த `காமிரா': கம்ப்ïட்டரில் பார்த்து ரசித்த ஊழியர் `சஸ்பெண்டு

 

சிட்னி, மே. 7-

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல தனியார் டி.வி. நிறுவன தலைமை அலுவலகத்தில் பெண்கள் உடை மாற்றுவதற்காக தனி அறை உள்ளது.

டி.வி. நிகழ்ச்சிக்கு வரும் பெண்கள் இந்த அறைக்கு சென்று வெவ்வேறு உடைகளை மாற்றிக்கொண்டு விதம் விதமாக நிகழ்ச்சிகளில் தோன்றுவார்கள். இவர் களை டி.வி.யில் பார்பதை விடவும் நேரில் பார்க்க துடித்தார் அங்குள்ள ஊழியர் ஒருவர்.

இதற்காக அவர் ஒரு திட்டம் தயாரித்து செயலிலும் இறங்கினார்.

பெண்கள் உடை மாற்றும் அறையில் சிறிய விசேஷ காமிரா ஒன்றை ரகசியமாக பொருத்தினார். பின்னர் தனது அறையில் இருக்கும் கம்ப்ïட்டரில் "லைவ்"வாக காட்சிகளை காண ஆரம்பித்தார்.

பல்வேறு பெண்கள் அவசரம் அவசரமாக உடை மாற்றுவதை இவர் மெல்ல, நிதானமாக பார்த்து ரசித்தார்.

கடந்த வாரம் அந்த ஊழியர் விடுமுறையின் போது மற்றொருவர் அவரது பணியை செய் தார்.

ஏற்கனவே கம்ப்ïட் டரில் `சேவ்' செய்து வைத் திருந்த உடை மாற்றும் காட்சிகள் தற்செயலாக அவரது கண்ணில் பட்டது.

அவ்வளவுதான் ஆபீஸ் முழுவதும் `ஆ' என்று அலறியது.


`ஆப்' எடுத்து வீட்டி லிருந்த அந்த ஊழியரை அழைத்து சஸ்பெண்டு செய்து `ஆப்பு' வைத் திருக்கிறார் `எம்.டி.'.

அந்த நிறுவன பெண் ஊழியர்களோ `அய்யோ... கருமம், கருமம். அந்தப்பாவி என்னத்த எல்லாம் பாத்து தொலைச்சானோ' என்று தினமும் கூச்சப் பட்டபடியே வேலைக்கு வந்து செல்கிறார்கள்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails