Wednesday, May 7, 2008

வீரர்களின் தலை மதிப்பு எகிறும்: அடுத்த சீசனுக்கான ஏலத்தொகை அதிகரிப்பு

வீரர்களின் தலை மதிப்பு எகிறும்: அடுத்த சீசனுக்கான ஏலத்தொகை அதிகரிப்பு

மெல்போர்ன், மே.7-

முதலாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களை சம்பந்தப்பட்ட அணிகளின் உரிமையாளர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்தனர். ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.20 கோடி வரை செலவு செய்யலாம் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்து இருந்தது.

இருப்பினும் சில அணி உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்டதை விட கொஞ்சம் கூடுதல் தொகையை செலவு செய்தனர். இந்த ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி ரூ.6 கோடிக்கு ஏலம் போனார்.

அவரை சென்னை அணி வாங்கியது. அதே சமயம் சில வெளிநாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பை விட குறைந்து தொகைக்கு ஏலம் போனார்கள். இந்த வகையில் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஏலத்தில் வீரர்கள் இதை விட அதிக தொகையை சம்பாதிக்க இருக்கிறார்கள். ஏலத்தில் ஒவ்வொரு அணியும் செலவு செய்யும் தொகையை ரூ.61 கோடியாக உயர்த்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த சீசனில் ஒரு வீரர் சம்பாதிக்கும் தொகை ரூ.10 கோடியை கூட எளிதாக தாண்டி விடும் வாய்ப்பு உள்ளது.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails