Thursday, May 1, 2008

தலீபான்களிடம் இருந்த நகரை ராணுவம் கைப்பற்றியது

 


காபூல், மே.1-

ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள ஹெல்மாண்டு மாநிலம் தலீபான்களின் செல்வாக்கு உள்ள பகுதி ஆகும். அங்கு உள்ள பல நகரங்கள் தலீபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அப்படி தலீபான்கள் வசம் இருக்கும் ஒரு நகரம் கர்ம்சிர் ஆகும்.

சமீப காலமாக ஹெல்மாண்டு மாநிலத்தில் அமெரிக்க ராணுவம் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறது. கர்ம்சிர் நகரை கைப்பற்றும் நோக்கத்தோடு நூற்றுக்கணக்கான அமெரிக்க ராணுவ வீரர்கள் அந்த நகருக்குள் நேற்று முன்தினம் புகுந்தனர். அவர்களை எதிர்த்து தலீபான் தீவிரவாதிகள் சிறிய அளவில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் எந்த பலனும் கிடைக்கவில்லை.

ராணுவ வீரர்கள் அந்த நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த நகரில் உள்ள அரசாங்க அலுவலகங்களின் கட்டுப்பாட்டை ராணுவம் தன் வசம் கொண்டு வந்தது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ அதிகாரி கேப்டன் கெல்லி பிரஷர் தெரிவித்தார்.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=409843&disdate=5/1/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails