`விலைவாசி உயர்வுக்கு இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களே காரணம்'
அமெரிக்க அதிபர் புஷ் சொல்கிறார்
வாஷிங்டன், மே.4-
``இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள், நல்ல தரமான உணவை உண்ண ஆரம்பித்ததால்தான் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து விட்டது'' என்று அமெரிக்க அதிபர் புஷ் தெரிவித்தார்.
அமெரிக்க மந்திரி பேச்சு
இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதிலும் உணவுப் பொருட்களின் விளைச்சல் வெகுவாக குறைந்து விட்டது. கணிசமான அளவிலான உணவு பொருட்களை பயோ-டீசல் உற்பத்திக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
இதற்கிடையே, `இந்தியர்கள் அதிகமாக உணவு சாப்பிடுவதால்தான் தேவை அதிகரித்து விட்டது' என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி கண்டலீசா ரைஸ் கடந்த வாரம் தெரிவித்தார். இந்த நிலையில், வாஷிங்டன் அருகே மிசோரி என்ற இடத்தில் நடந்த பொருளாதார மாநாட்டில் அதிபர் புஷ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியர்களே காரணம்
தற்போதைய விலைவாசி உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும் குறிப்பிடத்தக்க சில காரணங்களே முக்கியமானவை. உலகம் முழுவதும் உணவ பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் வளமான வாழ்க்கைக்கு திரும்பி விட்டன. இந்த நாடுகளில் பொருட்களை விற்பதற்கு பெரிய நாடுகள் கூட விரும்புகின்றன.
இந்தியாவில் உள்ள மக்களில் 35 கோடி பேர் நடுத்தர வர்க்கத்தினராக உள்ளனர். இது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மக்கள் அனைவரும், வசதி வாய்ப்பு அதிகரித்ததும் தரமான, சத்தான உணவு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். அதனால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பயோ-டீசல் உற்பத்தி
அதுபோல பயோ-டீசல் உற்பத்திக்கு உணவு பொருட்களை பயன்படுத்துவதும் மற்றொரு காரணம் என்பதை மறுக்க முடியாது. எரிபொருட்களின் விலை கடுமையாக உயரும்போது இதை தவிர்க்க முடியாது. நீங்கள் ஒரு விவசாயியாக இருந்தால், உங்கள் விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும் இடத்தில்தானே விற்பனை செய்வீர்கள்.
ஆப்பிரிக்க Ö உள்ளிட்ட வளரும் நாடுகளில் அமெரிக்காவின் பொருளாதார கொள்கையை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு வந்துள்ளதாக நான் கருதுகிறேன். வறுமையில் உள்ள நாடுகளில் பசி ஏற்படும்போது எல்லாம் அந்த துயரை துடைப்பதில் அமெரிக்கா முன்னிலையில் இருந்து வருகிறது. எனவே, அந்த நாடுகளில் உள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்த அமெரிக்கா உதவும்.
இவ்வாறு அதிபர் புஷ் கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=410443&disdate=5/4/2008
No comments:
Post a Comment