Thursday, May 8, 2008

ரஷ்யாவுக்காக விண்ணில் பறந்த நாய்

லைக்கா'... இந்தப் பெயரைக் கேட்டதும் ஏதாவது தோன்றுகிறதா... பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்தும் போது நன்றாக கவனித்திருந்தால் நிச்சயம் நினைவுக்கு வரும்... சரி மூளையை கசக்காதீர்கள்... 'லைக்கா'... விண்வெளியில் அனுப்பப்பட்ட முதல் உயிரினமான பெண் நாயின் பெயர்.

கடந்த 1957ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி 'ஸ்புட்னிக்-2' என்ற உலகின் 2வது செயற்கைக்கோள் மூலம் லைக்கா விண்ணில் பயணித்தது. வான்வெளியில் பயணித்த முதல் உயிரினம் என்ற பெருமையை பெற்ற லைக்கா, ஒரு சில மணி நேரத்திலேயே உயிரிழந்தது.

பிராணவாயு பற்றாக்குறை காரணமாக லைக்கா இறந்ததாக அப்போது தெரிவித்த ரஷ்ய அரசு, கடந்த 2002 அக்டோபரில் லைக்காவின் மரண சாசனத்தை திருத்தி வெளிட்டது... "லைக்கா பிராணவாயுக் குறைபாட்டால் இறக்கவில்லை, விண்வெளியின் வெப்பம் தாளாமலே உயிரிழந்தது" என்று.

FILE
இப்படி வீர மரணம்(!) அடைந்த லைக்காவுக்கு ரஷ்ய அரசு கடந்த ஏப்ரல் 11ம் தேதி சிலை வைத்துள்ளது. மாஸ்கோ நகரில் ஸ்புட்னிக்-2 செயற்கைக்கோள் ஏவப்பட்ட இடத்திற்கு அருகே உள்ள ராணுவ ஆராய்ச்சி நிலையத்தில் அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது இந்த ஆளுயர சிலை. இதன் உயரம் மிகத் துல்லியமாக 2 மீட்டர் (படத்தைப் பார்த்து நீங்களை அளந்து கொள்ளுங்கள்).

கடந்த காலத்தில் வல்லமை படைத்த வல்லரசு யார் என்பதில் ரஷ்யா, அமெரிக்கா இடையே குடுமிப்பிடி சண்டை. விண்வெளியில் கால் பதிக்க வேண்டும், அங்கும் தத்தமது நாட்டின் கொடிகளை பறக்க விட வேண்டும் என 2 நாடுகளுமே கங்கணம் கட்டிக் கொண்டு யோசித்தன. இதன் விளைவாகவே உலகின் முதல் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

சரி காலண்டரை கொஞ்சம் பின்னோக்கி திருப்புவோம்.... ஆண்டு 1957... மாதம் அக்டோபர்... ரஷ்யா அணு ஆயுத சோதனை நடத்த தேவையான அனைத்து நடவடிக்கையிலும் அதி தீவிரமாக மூழ்கியிருந்த சமயம். அந்நாட்டின் ராணுவ விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் பாம் தயாரிக்கும் பணியில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டிருந்தனர்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ரஷ்யாவின் வி-7 ஏவுகணையை, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணையாக பயன்படுத்த ராணுவம் திட்டமிட்டிருந்தது. அப்போது தான் அந்நாட்டின் தலைமை விஞ்ஞானியான கொரோலெவ்-க்கு அந்த யோசனை தோன்றியது.

உடனே அதனை அப்போதைய அதிபர் குருஷேவின் காதில் கசிய விட்டார். இதன் விளைவாகவே
FILE
உலகின் முதல் செயற்கைக்கோள் உருவானது.


கொரோலெவ் யோசனை... வி-7 ஏவுகணையை பயன்படுத்தி உலகின் முதல் செயற்கைக்கோளை ஏவ வேண்டும் என்பது தான். அவரின் யோசனைப்படியே கடந்த 1957ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி ஸ்புட்னிக்கை ரஷ்ய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஏவினர். இதுவே விண்வெளி போட்டியிலும் செம்படையின் ஆதிக்கத்திற்கு ஆனா, ஆவன்னா எழுதும் சம்பவமாக அமைந்தது.
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0804/23/1080423035_1.htm

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails