Sunday, May 11, 2008

இன்று அன்னையர் தினம்-மும்பையில் 4-வது மாடியில் இருந்து குழந்தையை வீசி கொன்ற தாய்

உண்மைதான் இன்று அன்னையர் தினம்.உலகுக்கு ஒரு மனிதனை தந்து விடுவது மட்டுமல்ல ஒரு அன்னையின் கடமை.அவன் மகானாக மாறும் வரை அவனுக்கு வழிக்காட்ட வேண்டும்.அதுவே உண்மையான அன்னையின் செயலாக அமையும்.

மும்பை, மே. 11-

மும்பை நரேலியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தயானதா. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 4 வயதில் ரிஷிகேஷ் என்ற குழந்தை இருந்தது.

தயானதாவுக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத் தன்று அனிதா கணவருடன் சண்டை போட்டார். அப் போது ஆவேசம் அடைந்த அனிதா கணவர் மீது உள்ள ஆத்திரத்தில் குழந்தை ரிஷிகேஷை 4-வது மாடியில் இருந்து வெளியே தூக்கி வீசினாள்.

ரத்த வெள்ளத்தில் உயி ருக்கு போராடிய குழந் தையை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றனர். அங்கு குழந்தை ரிஷிகேஷ் பரிதாப மாக இறந்தது.

முதலில் குழந்தை தவறி விழுந்து இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் உறவினர் ஒருவர் குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறினார்.

போலீசார் தீவிர விசா ரணை நடத்தியதில் அனிதா குடிபோதையில் கணவருடன் சண்டை போட்டு குழந்தையை தூக்கி வீசியதாக தெரிய வந்தது. போலீசார் அவளிடம் விசாரணை நடத்தி வருகிறார் கள்.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails