திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் சோதனை கட்டாயம்
மும்பை, பிப். 4- திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் பரிசோதனையை கட்டாயமாக்க மாராட்டிய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் பரிசோதனையை கட்டாய மாக்க வேண்டும். அப்போதுதான் அப்பாவிகளுக்கு எய்ட்ஸ் நோய் பாதிப்புகள் குறையும் என்று அரசு அமைத்த உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை அரசு ஏற்று, பொது மக்களின் கருத்தை அறிய முடிவு செய்துள்ளது. பொது மக்களின் கருத்தை அறிந்ததும், இது தொடர்பான சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஏற்கெனவே, கோவா, ஆந்திராவில் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் மக்களின் எதிர்ப்பு காரணமாக அமல்படுத்த முடியவில்லை.
மராட்டியத்தில் அமல்படுத்தப்பட்டால் அதுவே திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயமாக்கும் முதல் மாநிலமாக இருக்கும்.
No comments:
Post a Comment