உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க... |
உலகில் இன்று பெரும்பாலானோரை வாட்டி வதைப்பது உயர் ரத்த அழுத்த நோய்தான். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதயம், சிறுநீரகங்கள் மற்றும் மூளை போன்றவைகளும் பாதிப்புக்குள்ளாகும். எனவே, ரத்த அழுத்த அளவை எப்போதும் கட்டுப்பாட்டுக்கள் வைத்திருப்பது அவசியம். அதற்கான சில குறிப்புகள் : * ரத்த அழுத்த அளவை அடிக்கடி பரிசோதிக்கவும். * ரத்த அழுத்த அளவு, உயர் நிலையில் 120 எம்எம்எச்ஜியும், கீழ் நிலையில் 80 எம்எம்எச்ஜியும் இருக்கலாம். இந்த அளவுகளை தாண்டினால், உடனடியாக மருத்துவரை அணுகவும். * உணவுக்கட்டுப்பாடு மூலம் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்கலாம். அதிக காரம், புளிப்பு, உப்பு மற்றும் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட மற்றும் கொழுப்புச் சத்துக்கள் அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும். * நடைபயிற்சி, நீச்சல் போன்ற பயிற்சிகளை செய்வது ரத்த அழுத்ததை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். |
(மூலம் - வெப்துனியா) |
No comments:
Post a Comment