Thursday, May 8, 2008

அப்பரண்டீஸ் அர்ச்சகர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் தங்களது முதல் ஹோமத்தை நடத்தினர்

முதல் ஹோமத்தை நடத்திய ஸ்ரீரங்கம் பயிற்சி அர்ச்சகர்கள்

    

ஸ்ரீரங்கம்: தமிழக அரசின் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சியை மேற்கொண்ட முதல் பேட்ச் அர்ச்கர்கள், ஸ்ரீரங்கம் கோவிலில் தங்களது முதல் ஹோமத்தை நடத்தினர்.

தமிழக அரசு அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதன்படி வைணவ மத பூஜை முறைகள் குறித்து ஒரு ஆண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

திருச்சியில் நடந்து வந்த இந்த ஒரு ஆண்டு பயிற்சி வகுப்பின் முதல் பேட்ச் வகுப்பு முடிவடைந்துள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பயிற்சி அர்ச்சகர்கள், நேற்று ஸ்ரீரங்கம் ஸ்ரீ கட்டழகிய சிங்கர் கோவிலில் தங்களது முதல் ஹோமத்தை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியின்போது ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் உடன் இருந்தார்.

மொத்தம் 30 பயிற்சி அர்ச்சகர்கள், ஸ்ரீசுதர்சன ஹோமத்தை முதன் முதலில் நடத்தினர். தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என இரு பிரிவுகளாக பிரிந்து இந்த பயிற்சி ஹோமம் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் 2 மணி நேரத்திற்கு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து அறநிலையத்துறை இணை இயக்குநரும், ரங்கநாதசுவாமி கோவில் செயல் அதிகாரியுமான கவிதா கூறுகையில், இந்த மாத இறுதியில் பயிற்சி அர்ச்சகர்கள் எழுத்துத் தேர்வை எழுதவுள்ளதாக தெரிவித்தார்.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails