நக்மா மன(த)மாற்றம்!
''என் வேதனைக்குரிய பழைய நினைவுகளை நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. ஏசு கிறிஸ்துவை மனதார நேசிக்க ஆரம்பித்ததில் இருந்துதான் அமைதி, சந்தோஷம், சமாதானம் இதெல்லாம் எனக்குள் நிறைந்திருக்கு. நான் கிறிஸ்துவ பிரசாரங்களில் ஈடுபடுவதால், சினிமா துறையில் தொடருவது கஷ்டமாக இருந்தாலும், எனக்குத் தேவையான பலத்தை ஏசு தருவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. என் அம்மா, முஸ்லிம். அப்பா, இந்து. நான் படித்ததெல்லாம் கிறிஸ்துவ நிறுவனங்களில்! ரவிசங்கரின் 'வாழும் கலை'யில்கூட ஆர்வமாயிருந்ததுண்டு. கடந்த இரண்டு வருடங்களாக நான் கிறிஸ்துவ மதத்தை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். 'ஏசுவின் இரண்டாம் வருகை' நிச்சயமாக நடக்கப்போகிறது. அதற்காக நாமெல்லாம் காத்திருக்க வேண்டும்'' இப்படி தன் எண்ணங்களை கொட்டியிருப்பவர் வேறு யாருமல்ல. நடிகை நக்மாதான். கடந்த மே 1-ம் தேதியன்று கீழ்ப்பாக்கம் ஏரியாவில் உள்ள ஒரு பள்ளியில் 'மியூசிக் கேர் 2008' என்கிற பெயரில் பிரபல சினிமா பாடகர் ஜாலி ஆப்ரஹாம் நடத்திய கிறிஸ்துவ பிரார்த்தனை கூட்டத்தில் தான் நக்மா இப்படிப் பேசினார். நக்மா மேடையில் ஏறும்வரை, யாருக்கும் சொல்லாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தார் ஜாலி ஆப்ரஹாம்.
நன்றி : ஜூனியர் விகடன்

No comments:
Post a Comment