பாகிஸ்தானியர் தலை துண்டிப்பு
துபாய், மே.3-
சவுதி அரேபியாவில் 3 பாகிஸ்தானியர்கள் தலை துண்டித்துக் கொல்லப்பட்டனர். போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக இப்படி தண்டிக்கப்பட்டனர். இஸ்லாமிய சட்டப்படி போதை பொருள் கடத்தல் குற்றத்துக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது அந்த நாட்டின் வழக்கம் ஆகும். அதன்படி ரியாத் நகரில் அவர்களுக்கு இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.
6 நாட்களுக்கு முன்பு அவர்களின் கூட்டாளிகள் ஜெட்டா நகரில் இதேபோல வாளால் தலை துண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை ஆகிய குற்றங்களுக்காக இந்த ஆண்டு இதுவரை 56பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=410405&disdate=5/3/2008



No comments:
Post a Comment