Thursday, May 15, 2008

அனைவருக்கும் கல்வி என்று இந்த நாட்டில் உருவாக்கியதே கிறிஸ்தவர்கள்தான்-தமிழர் தலைவர் கி. வீரமணி

 
லயோலா கல்லூரியில் தமிழர் தலைவர் உரை
 
மனுதர்மம் இந்த நாட்டில் கோலோச்சிய காரணத்தால் வாழ்ந்த மன்னர்கள் மனுதர்மப்படிதான் ஆட்சி நடத்தினார்கள்.
சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்கக் கூடாது
சேரர்கள் ஆனாலும், சோழர்கள் ஆனாலும், பாண்டியர்கள் ஆனாலும் பலபேரும் அந்த வழிபட்டவர்களாக இருந்த காரணத்தால் அவரைப் பொறுத்த வரையிலே எதை நினைத்தார்கள் என்று சொன்னால் குலதர்மம், மனுதர்மப்படி எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்ற நிலையில் ஆண்டார்கள்.
பஞ்சமர்களுக்குக் கீழானவர்கள் பெண்கள்
பெண்கள் என்பவர்கள் அய்ந்தாவது சாதியான பஞ்சமர்களுக் குக் கீழான ஆறாவது ஜாதிக்காரர்களாவார்கள். எனவே, சமுதாயத்தில் சரி பகுதியாக இருக்கின்ற பெண்களுக்குப் படிப்பு கிடையாது. நூற்றுக்கு 50 விழுக்காடு மக்களுக்குப் படிப்பு கிடை யாது. நூற்றுக்கு எண்பது விழுக்காடாக இருக்கின்ற ஒடுக்கப் பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் படிப்பு கிடையாது. அறிவைக் கொடுக்கக் கூடாது
எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்கக் கூடாது.
 
வேதம் என்ற வார்த்தைக்கு அறிவு என்ற பொருள். எனவே வேதத்தை இன்னொருவர் படிப்பதைக் கூட இவர் காதால் கேட்கக் கூடாது. கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும். இவனே படித்தால் நாக்கை அறுக்கவேண்டும் என்ற நிலை இருக்கிறது. எனவேதான் யாரும் துணிவதற்குத் தயாராக இல்லை. இவர்களுக்குப் படிப்பைக் கொடுத்தால் இதைவிட பாவம் வேறு இருக்க முடியாது. பொதுவாகவே மக்களுக்குப் படிப்பு மறுக்கப்பட்டது அதற்குக் காரணம் என்ன? அதிலேயிருந்து இன்னொரு படையெடுப்பு வந்தது. அதிலும் குறிப்பாக கிறித்தவர்கள் மதத்தைப் பரப்புவதற்காக இந்த நாட்டிற்கு வந்தார்கள் என்று சொல்லிக் கொண்டால்கூட அவர்களாலே ஏற்பட்ட மிகப் பெரிய சமூக மறுமலர்ச்சி என்னவென்று சொன்னால் அனைவருக்கும் கல்வி என்று இந்த நாட்டில் உருவாக்கியதே கிறிஸ்தவர்கள்தான். அவர்கள் தான் முதல் காரணம் (கைதட்டல்)
 
இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் முன்னுரை யில் உரையாற்றினார்.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails