Monday, May 12, 2008

இணைய பதிவாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை-உங்கள் வலைமலரில் வேறு நபரின் கட்டுரை தானக பதியும் அபாயம்

பிளக்கர் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை.உங்களுக்கு தெரியாமல் உங்கள் பிளக்கரில் பதிக்கப்படும் கட்டுரைகள் அபாயம்

நண்பர் சுல்தான் அவர்கள் கடந்த நாட்களில் அவருடைய பிளக்கரில் ஒரு பதிவு தானாக வந்துவிட்டதாகவும்.அதற்கு தான் வருந்துவதாகவும் எழுதியிருந்தார்.அதிலும் தன் பாஸ்வேர்டை மாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.சரி இதில் என்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள்.




இரண்டு பிளக்கரில் இருந்து இரு கட்டுரைகளை நண்பர் சுல்தான் படித்துள்ளார்.அவருக்கே தெரியாமல் அந்த இரண்டு கட்டுரைகளும் இணைந்து புது கட்டுரையாக அவருடைய தளத்தில் பதிந்து விட்டது.அதற்கு அவருடைய பாஸ்வேர்ட் காரணமாம் எப்படி இருக்குதுங்க நம்ம கதை.விட்டாலாச்சாரியார் தோத்து போவார் போல இருக்கு.சரி நான் அருமை இணைய நண்பர்களை கேட்டுக்கொள்ளுவது இதற்கு ஏதாவது சாத்தியக்கூறுகள் உண்டா என்பதுதான்.

மேலும் நண்பர் நாய் கடித்தாலும் நாயை திரும்ப கடிப்பது மனிதனுக்கு அழகல்ல என்று ஒரு நல்ல கருத்தை சொல்லி சக பதிவாளரை நாய் என்று சொல்லி மகிழும் வக்கிர புத்தியை வெளிப்படுத்தியதை வன்மையாக கண்டிக்கிறேன்.கருத்துக்கள் மோதுவது தவறல்ல.ஆனால் அதை சொன்ன மனிதனை நாய் என்று சொல்ல யாருக்கு உரிமை உண்டு.சரி அப்படியானால் இணையத்தில் எதிர்வினை கருத்துக்கள் சொல்லும் அனைவரும் நாய்களா?60மேற்பட்ட இஸ்லாமிய தளங்கள் கிறிஸ்தவத்தையும்,இந்து மதத்தையும் தாக்கும் பொழுது இந்த நாய் தத்துவ எங்கே போனது.

திராவிட கழக பெயரை வைத்துக்கொண்டு பெரியார் படம் போட்டுக்கொண்டு கிறிஸ்தவர்களையும்,இந்துக்களையும் பற்றி எழுதும் இஸ்லாமியர்களை இந்த நாய் தத்துவம் சொல்லி அடக்க வேண்டியது தானே.

கடைசியாக நண்பர் சுல்தானவர்களே நீங்கள் சொல்லுவதை சரி என்று நிருபிக்க முடியுமா?அதாவது இரண்டு பிளக்கரில் பதித்த கட்டுரை படித்தவருடைய பிளக்கரில் தானாக புது பதிவாகி அவைகள் தேன்கூட்டிலும்,மற்ற தளங்களிளும் பதிக்கப்படுமா? இதற்கு வாய்ப்பு உள்ளதா?அல்லது உங்கள் பாஸ்வேர்டை யாரரவதும் திருடி இப்படி செய்துவிட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா?இதற்கு உங்கள் பதில் வருமா?அல்லது வராதா?என்பது எனக்கு தெரியாது.ஆனால் நண்பர்கள் யாரவதும் இது எப்படி நடக்க சாத்தியம் என்பதை விளக்கினால் நலம்.







சுல்தான் அவர்களின் பதிவு


அறிவிப்பு:
[ஏதோ கோல்மால் நடந்திருக்கு. கிறிஸ்துநேசன் மாதிரி அவதூறு ஆட்களை சில சமயங்களில் படிப்பதோடு சரி. அதற்கெல்லாம் எதிர்வினை ஆற்றுவதை தவிர்க்க நினைப்பவன். எதிர் வினை ஆற்றினாலும் மற்ற மதங்களை குறை சொல்வதை விடுத்து என் மார்க்கத்திலுள்ள நன்மைகளைச் சொல்வதையே விரும்புபவன். இரண்டு இடுகையையும் நேற்று படித்தேன்.ஆனால் எப்படி என் பதிவில் வந்ததென அறியவில்லை. அறிந்த உடனே கிறித்துவ நம்பிக்கை பற்றி என் பதிவில் வந்த தவறான இடுகையை அழித்து விட்டேன். நாய் கடித்தால் நாயைத் திரும்பவும் கடிப்பது நல்ல மனிதப் பண்பாகாது என்று நம்புபவன் நான். - நலம் விரும்பிகளும் நண்பர்களும் பொறுத்தருள்க - என் பதிவில் வந்த தவறான இடுகைக்கு வருந்துகிறேன்..என் பாஸ்வேர்ட் மாற்றி விட்டேன்.]


http://sultangulam.blogspot.com/2008/05/blog-post_05.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails