Monday, May 5, 2008

ஹிலாரிக்கு நடிகை திடீர் ஆதரவு

ஹிலாரிக்கு நடிகை திடீர் ஆதரவு

.

 
.
லாஸ் ஏஞ்சலஸ், மே 3: அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படும் ஹிலாரி கிளிண்டனுக்கு பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
.
நியூயார்க் மாகாண செனட் உறுப்பினரான ஹிலாரி அறிவாற்றல் மிக்கவர் என்றும் வலிமையான தலைவர் என்றும் எலிசபெத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஹிலாரியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக எலிசபெத் 2300 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்டியானா மற்றும் வடக்கு கரோலினாவில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள முதற்கட்ட வாக்குப்பதிவில் ஹிலாரிக்கு வாக்களிக்குமாறு அவர் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails