Friday, May 9, 2008

ஒரு பிடி மண் கூட இல்லாததால் அவர்களுக்கு என்று ஒரு தனிநாடு


இஸ்ரேல் நாட்டின் 60-வது ஆண்டு விழா


ஜெருசலேம், மே.9-

இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட 60-ம் ஆண்டு விழாவை அந்த நாடு ஒருவாரத்துக்கு கொண்டாடி வருகிறது. விமானக்கண்காட்சிகள், இசை விழாக்கள், கடற்கரை விருந்துகள், வாணவேடிக்கைகள் என்று அந்த நாடு முழுவதும் கோலாகலங்களும், கொண்டாட்டங்களுமாக உள்ளன.

உலக நாடுகள் முழுவதும் பரவி இருக்கும் யூதர்களுக்கு சொந்தமாக ஒரு பிடி மண் கூட இல்லாததால் அவர்களுக்கு என்று ஒரு தனிநாடு வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இஸ்ரேல். ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்களை கொன்று குவித்ததை தொடர்ந்து ஏற்பட்ட அனுதாபத்தால் அவர்களுக்கு தனிநாடு உருவாக்கிக் கொடுப்பதில் அமெரிக்காவும், இங்கிலாந்தும் முனைப்பாக இருந்தன. அவர்களின் பூர்வீக பூமியான பாலஸ்தீனத்தை 2 ஆக பிரித்து அதில் ஒருபகுதிக்கு இஸ்ரேல் என்ற பெயர் சூட்டப்பட்டது. 60 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் பாலஸ்தீனமும் இஸ்ரேலும் சுமூகமாக அமைதியாக வாழ முடியவில்லை.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=411614&disdate=5/9/2008

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails