புஷ் சொன்னது தவறான தகவல்: இந்தியர்களை விட 5 மடங்கு அதிகம் சாப்பிடும் அமெரிக்கர்கள்; புள்ளி விவரம் அம்பலம்
புதுடெல்லி, மே. 4-
அமெரிக்க அதிபர் புஷ் விலைவாசி உயர்வு பற்றி கருத்து தெரிவிக்கையில் இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் இப்போது வருமானம் அதிகமாகி விட்டது. எனவே அதிகமாக சாப்பிடுகிறார்கள். இதனால் உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்து விட்டது என்று கூறி இருந்தார்.
ஆனால் இது உண்மை அல்ல. இந்தியர்களை விட அமெரிக்கர்கள் அதிகம் சாப்பிடுகிறார்கள் என்று புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது எந்த உணவு பொருளை எடுத்துக் கொண்டாலும் இந்தியர்களை விட அமெரிக்கர்கள் 5 மடங்குக்கு மேல் அதிகம் சாப்பிடுகின்றனர்.
இந்தியாவில் சராசரியாக ஒருவர் வருடத்துக்கு 178 கிலோ தானியம் சாப்பிடுகிறார். ஆனால் அமெரிக்காகாரர் 1046 கிலோ தானியம் சாப்பிடுகிறார். ஐரோப்பியர் சாப்பிடும் தானியத்தை விட 2 மடங்கு அதிகம் அமெரிக்கர் சாப்பிடுகிறாராம். ஒரு ஆண்டுக்கு முன்பு வரை அமெரிக்காவில் 946 கிலோ தானியம்தான் சாப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டுதான் 1046 கிலோ ஆக அதிகரித்து உள்ளது.
அமெரிக்கர் ஒரு ஆண்டுக்கு 78 கிலோ பால் சாப்பிடுகிறார். இதன் அளவு இந்தியாவில் 36 கிலோவாகவும், சீனாவில் 11 கிலோவாகவும் இருந்தது.
தாவர எண்ணையை பொறுத்தவரை அமெரிக் கர் 41கிலோ. இந்தியர் 11 கிலோவும் சாப்பிடுகின்றனர்.
No comments:
Post a Comment