Thursday, May 8, 2008

பெற்றோரை போல டாக்டராக விரும்புகிறேன்: பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் 2-வது இடம்பபிடித்த மாணவன் பேட்டி

திருச்செங்கோடு, மே. 9-

தமிழ்நாடு முழுவதும் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாயின. இதில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாண வன் தளபதி விக்ரம்குமார் 1181 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 2-வது இடம் பிடித்துள்ளார். அவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-

தமிழ் - 193

ஆங்கிலம் - 190

கணிதம் - 200

இயற்பியல் - 199

வேதியியல் - 199

உயிரியல் - 200

இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரிய குளம் தென்கரை ஆகும். தந்தை செல்வராஜ். தாய் இந்துமதி. இருவரும் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். தளபதி விக்ரமிற்கு உடன்பிறந்த தம்பி உள்ளார். அவன் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

மாநிலத்தில் 2-வது இடம் பிடித்த மாணவன் தளபதி விக்ரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளியில் நான் 10-ம் வகுப்பு படித்தேன். அப்போது 1060 மதிப் பெண்கள் பெற்று மாநில அளவில் 5-வது இடம் பிடித்தேன். மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு படித்தேன். ஆனால் ஒருசில மதிப்பெண்களில் 5-வது இடத்திற்கு தள்ளப் பட்டேன்.

அதன்பின்னர் பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு படித்தேன். ஆனாலும் 2-வது இடமே கிடைத்துள்ளது. இருந்த போதிலும் மகிழ்ச்சி யாக இருக்கிறது.

படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து கால்பந்து விளையாடுவதை 9-வது வகுப்பிலேயே நிறுத்தி விட்டேன். பொதுவாக இரவு 12 மணி வரை தொடர்ந்து படிப்பேன். அதன்பின்னர் தூங்கி விடுவேன். மீண்டும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து படிப்பேன்.

நான் மாநில அளவில் 2-வது இடம் பிடிக்க வித்யா விகாஸ் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நண்பர்கள், சென்னையில் ஆசிரியராக பணியாற்று என்னுடைய மாமா ஆகியோர் ஊக்கம் அளித்தனர்.

கடின உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்க முடியும். நான் எனது பெற்றோரைப் போல டாக்டராகி கிராம மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails