Friday, August 28, 2009

தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் மரணம் ஆதாரம் அற்றது- இந்தியா


தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் மரணம் ஆதாரம் அற்றது – இந்திய அதிகாரிகள் விசாரணை

RAWதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகள் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகத் தெரிய வருகிறது.

ராஜீவ் காந்தி படுகொலை குறித்து விசாரிக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு அதிகாரிகளே இவ்வாறு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள போதும், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இந்திய அரசு மேலும் ஒருவருட காலத்திற்கு தடைசெய்துள்ளது.

மேற்படி விசாரணைகளை மேற்கொள்ளவிருக்கும், பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் காலம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் மூன்று மாதத்திற்குப் பின்னர் மீண்டும் அதற்கு ஒரு வருட நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையிலேயே பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து ஆராய்வதற்காகவும் மேலதிக தகவல்களை பெறுவதற்காகவும் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதனால், ராஜீவ் காந்தி கொலைவழக்கினை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவை இந்திய அரசாங்கத்திற்கு இருக்கிறது. ஆயினும் அதற்கு முன் பிரபாகரன் கொல்லப்பட்டது திட்டவட்டமாக உறுதி செய்யப்பட வேண்டும். இலங்கை அரசால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதிலும், இதை அறிவித்த முறைகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் , அந்த அறிவிப்பு பலதரப்பிலும் சந்தேகங்களை உருவாக்கியுள்ளன.

அதே சமயம், தமிழகத்திலுள்ள , ஈழஆதரவு அரசியல்வாதிகளாலும், ஆதரவாளர்களாலும், பிரபாகரன் உயிரோடிருக்கின்றார் எனும் செய்தி தொடர்ச்சியாகப் பரப்புரை செய்யப்பட்டு வருவதும், இது விடயத்தில் சுலபமான முடிவுக்கு இந்தியா வரமுடியாதுள்ளதெனவும் கூறப்படுகிறது.


source:nerudal

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails