Monday, August 17, 2009

கணவனின் தாம்பத்திய ஆசைக்கு இணங்காத பெண்ணை பட்டினி போடலாம்


 


ஆப்கானிஸ்தான் நாட்டில் கணவனின் தாம்பத்திய ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்களை கணவன் பட்டினி போடலாம், பணம் கொடுக்க மறுக்கலாம் என்று சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. அந்த பெண்கள் மூலம் பிறந்த குழந்தைகளை வளர்ப்பதற்கான உரிமை குழந்தைகளின் தந்தைக்கும், தாத்தாக்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. பெண்கள் வேலைக்கு செல்ல விரும்பினால் அவர்கள் கணவர்களின் அனுமதியை பெறவேண்டும் என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

பெண்ணை கற்பழிப்பவர்கள் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரத்தப்பணம் கொடுத்து விட்டால் அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவில், திருமணம் செய்து கொண்ட பெண்கள் விருப்பம் இல்லாமலும் கணவன் அவளை கற்பழிக்க முடியும் என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் ஆகியோர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த சட்ட முன்வடிவு கைவிடப்பட்டது. அதுதான் இப்போது இப்படி ஒரு சட்டமாக வடிவம் எடுத்து உள்ளது.

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails